விவசாயிகளுக்கு ரூ.16,000, மூன்று தலைநகரங்கள்... ஜெகன் மோகன் ரெட்டியின் தேர்தல் வாக்குறுதிகள் என்ன?

ஜெகன் மோகன் ரெட்டி
ஜெகன் மோகன் ரெட்டி

விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 13500த்திலிருந்து ரூ. 16000 ஆக உயர்த்தப்படும். அமராவதி, விசாகப்பட்டினம், கர்நூல் ஆகிய என மொத்தம் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று வெளியிட்டார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி 'நவரத்னலு' என்ற பெயரில் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டிருந்த நிலையில், அதில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு இம்முறை 'நவரத்னலு ப்ளஸ்' என்ற பெயரில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள், ‘ஆந்திர பிரதேசத்தில் அமராவதியை போல, விசாகப்பட்டினம், கர்நூல் ஆகிய நகரங்களையும் சேர்த்து மொத்தம் 3 தலைநகரங்கள் உருவாக்கப்படும். விவசாயிகளுக்கான வருடாந்திர நிதியுதவியாக வழங்கப்படும் ஊக்கத்தொகை ரூ. 13500த்திலிருந்து ரூ. 16000 ஆக உயர்த்தப்படும். பயிர்களுக்கான வட்டியில்லா கடன் வரம்பு ரூ. 1 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக அதிகரிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி

பெண்களுக்கான 'அம்மா வோடி' திட்டப் பெண் பயனாளிகளுக்கான ஊக்கத்தொகை ரூ. 15000த்திலிருந்து ரூ. 17000 ஆக உயர்த்தப்படும். 45 - 60 வயது வரையிலான பெண் பயனாளிகளுக்கான 'ஒய்எஸ்ஆர் சேயுதா' நிதியுதவித் திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும். ரூ. 3000 ஆக வழங்கப்பட்டு வந்த நல ஓய்வூதியத் தொகை ரூ. 3500 ஆக உயர்த்தி வழங்கப்படும், என தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in