8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், 1 முன்னாள் ஆளுநர்... முதல்கட்ட தேர்தலில் முக்கிய அம்சங்கள்!

தேர்தல் வாக்குப்பதிவு
தேர்தல் வாக்குப்பதிவு

முதல்கட்ட மக்களவைத் தேர்தலில் 8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், ஒரு முன்னாள் ஆளுநர் ஆகியோர் களத்தில் உள்ளனர்.

முதல் கட்ட மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு (39), ராஜஸ்தான் (12), உத்தரப்பிரதேசம் (8), மத்தியப் பிரதேசம் (6), உத்தராகண்ட் (5), அருணாச்சலப் பிரதேசம் (2), மேகாலயா (2), அந்தமான் நிக்கோபர் தீவுகள் (1), மிசோரம் (1), நாகாலாந்து (1), புதுச்சேரி (1), சிக்கிம் (1), லட்சத்தீவு (1) ஆகிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இன்று தேர்தலை எதிர்கொள்கின்றன.

ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி ஜெய்ப்பூரில் வாக்களித்தார்.
ராஜஸ்தான் துணை முதல்வர் தியா குமாரி ஜெய்ப்பூரில் வாக்களித்தார்.

அசாம், மகாராஷ்டிராவில் தலா 5 தொகுதிகள், பீகாரில் 4 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 3 தொகுதிகள், மணிப்பூரில் 2 தொகுதிகள், திரிபுரா, ஜம்மு - காஷ்மீர், சத்தீஸ்கரில் தலா ஒரு தொகுதிகள் என மொத்தம் 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

ஆந்திரப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய நான்கு மாநிலங்களில் மக்களவைத் தேர்தலுடன், சட்டப்பேரவை தேர்தலும் சேர்த்து நடத்தப்படுகிறது. இவற்றில் அருணாச்சலப் பிரதேசம் (60 சட்டப் பேரவை தொகுதிகள்), சிக்கிம் (32 சட்டப் பேரவை தொகுதிகள்) இன்றைய முதல் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு இரண்டு மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 8.2 சதவீதமும், ராஜஸ்தானில் 10.7 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 12.2 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 14.1 சதவீதமும் பதிவாகி உள்ளது.

8 மத்திய அமைச்சர்கள், 2 முன்னாள் முதல்வர்கள், ஒரு முன்னாள் ஆளுநர் மற்றும் பல முக்கிய தலைவர்கள் இன்றைய தேர்தலில் களத்தில் உள்ளனர். மொத்தம் உள்ள 102 தொகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தொகுதிகள் கடும் போட்டியை எதிர்கொள்கின்றன.

முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு
முதல்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு

மத்திய அமைச்சர்கள் ஜிதேந்திர சிங், அர்ஜுன் ராம் மேக்வால், சஞ்சீவ் பால்யான், அசாம் முன்னாள் முதல்வர் சர்பானந்தா சோனோவால் உள்ளிட்ட பிரபலங்கள் இன்று அக்னிபரீட்சையை எதிர்கொள்கின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in