பாஜகவுக்கு ஓட்டுபோடுங்கள்... மம்தாவின் குண்டர்களை தலைகீழாக தொங்கவிடுவேன்... அமித் ஷா ஆவேசப் பேச்சு!

அமித் ஷா
அமித் ஷா

குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடுவதற்கு காங்கிரஸ் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கு தைரியம் இல்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா என்று தெரிவித்துள்ளார்.

மேற்குவங்க மாநிலம் உத்தர் தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கரண்டிகியில் ராய்கஞ்ச் தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் கார்த்திக் பாலுக்கு ஆதரவு கேட்டு நடைபெற்ற பேரணியில் அமித்ஷா பேசினார்.

அப்போது, "குடியுரிமை திருத்தச் சட்டத்தை தொடுவதற்கு காங்கிரஸ் கட்சிக்கும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜிக்கும் தைரியம் இல்லை. புதிய சட்டத்தின் கீழ் அனைத்து இந்து அகதிகளும் குடியுரிமை பெறுவார்கள். மம்தா பானர்ஜியால் ஊடுருவலை நிறுத்த முடியுமா? அவர்களால் முடியாது. மோடியால் மட்டுமே ஊடுருவலை தடுக்க முடியும். கடந்த முறை எங்களுக்கு 18 இடங்களை கொடுத்தீர்கள். ராமர் கோயிலை கொடுத்தவர் மோடி. இந்த முறை எங்களுக்கு 35 இடங்களை கொடுங்கள். ஊடுருவலை நிறுத்துவோம்.

அமித் ஷா
அமித் ஷா

சந்தேஷ்காலியில் மம்தா பானர்ஜி தனது வாக்கு வங்கி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக பெண்களை சித்திரவதை செய்ய அனுமதித்தார். உயர்நீதிமன்றம் தலையிட்டு இன்று குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வங்கதேச ஊடுருவல்காரர்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. மக்கள் ஊழலால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பாஜகவுக்கு வாக்களியுங்கள். மம்தா பானர்ஜியின் குண்டர்களை தலைகீழாக தொங்கவிடப்பட்டு தோலுரிப்பேன்.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வடக்கு வங்கத்தில் எய்ம்ஸ் மருத்துவமனையை மத்திய அரசு அமைக்கும் என்று உறுதியளிக்கிறேன். ராய்கஞ்சில் எய்ம்ஸ் அமைக்க திட்டமிட்டிருந்தோம். அதைத் தடுத்தது மம்தாதான். எங்களுக்கு 30 இடங்கள் கொடுங்கள். வடக்கு வங்காளத்தின் முதல் எய்ம்ஸ் பணியைத் தொடங்குவோம்" என்றார்.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

ராய்கஞ்ச் தொகுதியை 2019 இல் பாஜக வென்றது. வடக்கு வங்காளத் தொகுதியில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ கிருஷ்ண கல்யாணி இந்த தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் வரும் 26ஆம் தேதியில் வாக்குப்பதிவு நடக்க உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in