ரஷ்யாவின் அதிபராக 5வது முறையாக பதவியேற்பு... 71 வயதில் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிக்கும் புதின்

ரஷ்ய அதிபர் புதின்
ரஷ்ய அதிபர் புதின்

1999-ம் ஆண்டு முதல் அதிபர் அல்லது பிரதமர் பதவிகளில் ரஷ்யாவை தொடர்ந்து ஆண்டு வரும் விளாதிமிர் புதின், தனது 71வது வயதில் 5வது முறையாக ரஷ்ய அதிபர் பதவியில் இன்று பொறுப்பேற்றார்.

புதினை பார்த்தால் அவருக்கு 71 வயதாவதை எவராலும் நம்ப முடியாது. முன்னாள் ரஷ்ய உளவாளியான புதின், இன்றைக்கும் உடல் மற்றும் மனதை அதே கட்டுக்கோப்பு மற்றும் சுறுசுறுப்புடன் பராமரித்து வருகிறார். ரஷ்ய அரசியலில் அலெக்ஸி நவால்னி போன்ற எதிரிகள் அவ்வப்போது தலையெடுத்தாலும், அண்மையில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நவால்னி மறைந்தது போன்று அவர்கள் தடயமின்றி போய்விடுவார்கள். சர்வதேச அரசியலிலும், உக்ரைன் போர் வாயிலாக மேற்கத்திய நாடுகளுடன் சரி நிகர் சமரைத் தொடர்கிறார் புதின்.

பதவியேற்கும் புதின்
பதவியேற்கும் புதின்

உக்ரைன் போர் காரணமாக, அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளால் புதினின் இன்றைய பதவியேற்பு விழா புறக்கணிக்கப்பட்டது. ஆனபோதும் குறையேதுமின்றி திரண்ட கிரெம்ளின் விழாவில், அடுத்த 6 ஆண்டுகளுக்கு ரஷ்யாவை ஆள்வதற்கு இன்றைய தினம் உறுதியேற்றார் புதின். கடந்த கால் நூற்றாண்டு காலமாக, அதாவது 1999-ம் ஆண்டு முதல், ரஷ்யாவின் அதிபர் அல்லது பிரதமர் நாற்காலிகளில் அமர்ந்தபடி ரஷ்யாவை ஆட்சி செய்து வருகிறார் புதின்.

புடின் உள்நாட்டு அரசியல் நிலப்பரப்பில் அண்டை நாடுகளுடன் தீவிர ஆதிக்கம் செலுத்துவதோடு, சர்வதேச அரங்கில் அவர் மேற்கத்திய நாடுகளுடன் கடும் மோதலில் ஈடுபட்டுள்ளார். ரஷ்யாவை தோற்கடிப்பதற்கும் துண்டாடுவதற்கும் உக்ரைனை ஒரு வாகனமாக மேற்கத்திய நாடுகள் பயன்படுத்துவதாகவும் அவர் குற்றம் சாட்டுகிறார். மார்ச் மாதம் ரஷ்யாவில் பெயருக்கு நடந்த தேர்தலின் முடிவில் புதினின் மகத்தான வெற்றி மீண்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் எதிர்த்து களமிறங்கிய வேட்பாளர்கள் இருவர் தொழில்நுட்ப அடிப்படையில் தடைக்கு ஆளானார்கள்.

புதினின் பிரதான எதிரியான அலெக்ஸி நவால்னி ஒரு மாதம் முன்பாக, ஆர்க்டிக் சிறையில் சத்தமின்றி செத்துப் போனார். சலசலத்த மேலும் சில அரசியல் எதிரிகள் மற்றும் விமர்சகர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். வெகுசிலர் பாதுகாப்பாக வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்று, அங்கிருந்தபடி புதினுக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.

அலெக்ஸி நவல்னி
அலெக்ஸி நவல்னி

இன்றைய புதினின் அடுத்த இன்னிங்ஸ் தொடக்க விழாவை அமெரிக்கா மற்றும் பிற மேற்கத்திய நாடுகள் புறக்கணித்தன. "ரஷ்யாவில் நடைபெற்ற தேர்தலை சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்தாக நாங்கள் கருதவில்லை” என அமெரிக்கா கருத்து தெரிவித்தது. அமெரிக்காவை பின்பற்றி பிரிட்டன் , கனடா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புதின் பதவியேற்பு விழாவை புறக்கணித்தன. ஆனால் பிரான்ஸ் தனது தூதரை அனுப்புவதாக உறுதியளித்தது.

இதனிடையே புதின் பதவியேற்பு விழாவை கடுமையாக சாடியிருக்கும் உக்ரைன் "ரஷ்ய கூட்டமைப்பை ஒரு ஆக்கிரமிப்பு அரசாகவும், ஆளும் ஆட்சியை சர்வாதிகாரமாகவும் மாற்றிய ஒரு நபர், கிட்டத்தட்ட வாழ்நாள் முழுவதும் அதிகாரத்தில் இருப்பதற்கான சட்டபூர்வமான மாயையை உருவாக்கும் நிகழ்வு” என்று புதின் பதவியேற்பை விமர்சித்து உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in