விஜய் அரசியலுக்கு வர உரிமையுள்ளது... துரை வைகோ பரபரப்பு கருத்து!

துரை வைகோ
துரை வைகோ

நடிகர் விஜய் அரசியலுக்கு வர உரிமையுள்ளது என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார்.

மருதுபாண்டியர்கள் 222வது நினைவு நாளை ஒட்டி திருப்பத்தூர் செல்வதற்காக மதிமுக முதன்மை நிலைய செயலாளர் வைகோ சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்தடைந்தார்.

தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், “ தமிழகத்தில் நீட் தேர்வை பாஜகவைத் தவிர அனைத்து கட்சிகளும் எதிர்க்கிறது. அதில் மதிமுகவும் ஒன்று என்பதில் மாற்று கருத்து இல்லை. நீட் தேர்வுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக தமிழக அரசு கையெழுத்து இயக்கம் துவங்கியுள்ளது, அதற்கு மதிமுக சார்பாக முழு ஆதரவு உண்டு. ஒரு வருடத்திற்கு மேலாகவே சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் கையெழுத்துக்காக காத்திருந்தது. பல போராட்டத்திற்கு பிறகு அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி உள்ளார். ஆளுநரால்தான் இந்த ஒரு ஆண்டு கால தாமதம் ஏற்பட்டது. நீட்விலக்கு தமிழ்நாட்டிற்கு வரும் என்கிற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது” என்றார்

துரை வைகோ
துரை வைகோ

மேலும், “மணிப்பூர் கலவரத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதுபோல நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதாகவே ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் இருக்கும் என்கிற நம்பிக்கை உள்ளது.

நடிகர் விஜயும், அவருடைய தந்தையும் உழைப்பால் உயர்ந்தவர்கள் என்பதில் சந்தேகம் இல்லை. எனவே அவரும் அரசியலுக்கு வருவதற்கு உரிமை உள்ளது. ஆனால் அதை முடிவெடுக்க வேண்டியது மக்கள்தான். அவர்கள் வரக்கூடாது என்று நினைப்பதற்கு வேறு யாருக்கும் உரிமை கிடையாது. அவர்களை எங்கு வைக்க வேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பை திமுக, மதிமுக என அனைவரும் வலியுறுத்துகிறோம். பீகாரைப் போல மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பை எடுக்கலாம் என்று கூறினாலும், தேசிய ஜனத்தொகையுடன் சாதிவாரி கணக்கெடுப்பு சேர்ந்து எடுக்கும்போது பல நன்மைகள் உள்ளது, சுலபமாகவும் எடுக்கலாம். ஒன்றிய அரசு காலம் தாழ்த்தினால் தமிழக அரசு சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும். அண்ணாமலை ஒரு சராசரி அரசியல்வாதி தான். சில சமயங்களில் தரம் தாழ்ந்து நடந்து கொள்கிறார்” என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in