உருவானது ஹாமூன் புயல்... 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு
இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு

புயல் உருவாகியுள்ளதை குறிக்கும் வகையில் தமிழ்நாட்டின் நாகை உள்ளிட்ட  ஒன்பது துறைமுகங்களில் இரண்டாம் எண் புயலை எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

மேற்கு மத்திய வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள  காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. ஹாமூன்  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல்  அடுத்த 12 மணி நேரத்தில் வடமேற்கு வங்கக்கடலில் தீவிர புயலாக வலுப்பெற்று வடக்கு வடகிழக்கு நோக்கி நகரும். இது நாளை (அக்டோபர் 25 )  நண்பகலில் கெபுபாரா மற்றும் சிட்டகாங் இடையே ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து வங்கதேச கடற்கரையை கடக்க வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், புயல் உருவாகி உள்ளது என்பதை குறிக்கும் வகையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி உள்ளிட்ட 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in