அடுத்த அதிரடி... பழைய புகாரில் கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் பணி நீக்கம்!

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

2007-ம் ஆண்டு அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவாலின் தனி உதவியாளரை பணி நீக்கம் செய்து லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் அறிவித்துள்ளது.

டெல்லி மாநில முதலமைச்சர் அர்விந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டள்ளார். இருப்பினும் அவர் முதலமைச்சர் பொறுப்புகளை சிறையில் இருந்தபடியே கவனித்து வருகிறார். புதிய அறிவிப்புகளையும், அமைச்சர்களுக்கான அறிவுறுத்தல்களையும் அவர் சிறையில் இருந்தபடியே வழங்கி வருகிறார்.

தன்மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் அர்விந்த் கேஜ்ரிவால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி சட்டப்பேரவை
டெல்லி சட்டப்பேரவை

இந்த நிலையில், அவருக்கு புதிய தலைவலியாக அவரது தனி உதவியாளர் பிபவ் குமார் என்பவர் டெல்லி மாநில லஞ்ச ஒழிப்பு இயக்குநரகத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2007-ல் மகேஷ் பால் என்ற அரசு ஊழியரை, பிபவ் குமார் பணியின் போது தடுத்து அவரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக நொய்டா காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் தற்போது அவரை பதவியில் இருந்து நீக்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநர் ராஜசேகர் தெரிவித்துள்ளார்.

அர்விந்த் கேஜ்ரிவால் - பிபவ் குமார்
அர்விந்த் கேஜ்ரிவால் - பிபவ் குமார்

கடந்த வாரம் பிபப் குமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் டெல்லி மதுபான கொள்கை ஊழல் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்திய நிலையில் தற்போது அவர் கேஜ்ரிவாலின் தனி உதவியாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு இயக்குநரகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ’அரசு ஊழியர்கள் அல்லாதவர்களை இது போன்ற பணிகளுக்கு நியமிக்கும் போது அவர்கள் மீது அரசு ஊழியர்களுக்கு எதிரான வழக்குகள் ஏதேனும் நிலுவையில் இருக்கிறதா என்பதை கண்காணித்த பின்னரே இணைக்க வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...   


சென்னை போலீஸாருக்கு குட்நியூஸ்... இன்று முதல் தபால் வாக்குகளைச் செலுத்தலாம்!

தமிழகத்தை 2 நாட்கள் வலம் வருகிறார் அமித் ஷா... நாளை முதல் ரோடு ஷோ, பிரச்சாரம்!

சத்துணவு திட்டத்தின் வித்தகர் பி.எஸ்.ராகவன் காலமானார்!

கேரள தேவாலயங்களில் 'மணிப்பூர் ஸ்டோரி' ஆவணப்படம் திரையிடல்... கடும் கொந்தளிப்பு!

அரசு செலவில் கட்சிக்கு ஆதரவான விளம்பரமா?... அச்சகங்களுக்கு தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in