மணிப்பூரில் மீண்டும் வன்முறை... வாக்குச்சாவடி மையத்தில் துப்பாக்கிச்சூடு; பதற வைக்கும் வீடியோ!

மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு
மணிப்பூரில் மீண்டும் துப்பாக்கிச்சூடு

மணிப்பூர் மாநிலத்தில் வாக்குச்சாவடி மையத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தில் இரு இன குழுக்களுக்கு இடையேயான வன்முறை காரணமாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. இதுவரை முழுமையாக அமைதி திரும்பாத நிலையில், அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் எதுவும் முழுமையாக பலனளிக்கவில்லை. பரபரப்பான இந்த சூழலில் மணிப்பூர் மாநிலத்தில் உள்ள அவுட்டர் மணிப்பூர் மற்றும் இன்னர் மணிப்பூர் தொகுதிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இன்னர் மணிப்பூர் தொகுதியில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்னர் மணிப்பூர் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

மணிப்பூர் வாக்காளர்கள்
மணிப்பூர் வாக்காளர்கள்

இது தொடர்பான வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் அடுத்தடுத்து இரண்டு முறை துப்பாக்கியால் சுடுவதும், அதைத் தொடர்ந்து தானியங்கி துப்பாக்கி மூலம் குண்டுகள் சுடப்படும் சத்தமும் கேட்கிறது. இந்த வீடியோவை எடுத்த நபர் பாதுகாப்பு கருதி சுவர் ஒன்றின் பின்னால் மறைவதோடு இந்த வீடியோ நிறைவடைகிறது. சுமார் 6 நொடிகள் மட்டுமே ஓடும் இந்த வீடியோ காட்சியின் போது மக்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள பதறி அடித்து ஓடும் காட்சிகளும் பதிவாகியுள்ளது.

இதுவரை வன்முறை கட்டுக்குள் கொண்டுவரப்படாத நிலையில், தற்போது துப்பாக்கி சூடும் நிகழ்ந்துள்ளது மணிப்பூரில் மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் ஏதேனும் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in