தஞ்சையில் ஊராட்சி மன்ற தலைவருக்கு தொடரும் சாதிய வன்கொடுமை... விசிகவினர் ஆர்ப்பாட்டம்!

தஞ்சையில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்
தஞ்சையில் விசிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் வல்லம் புதூர் ஊராட்சி தலைவரின் கணவரை சாதிப் பெயரைச் சொல்லித் திட்டி கொலை வெறி தாக்குதல் நடத்திய குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாவட்டம் வல்லம் புதூர் ஊராட்சி தலைவராக உள்ளவர் சாரதா. இவரது கணவர் பழனிச்சாமி. கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனிச்சாமியை அதே ஊரை சேர்ந்த சிலர் சாதிப் பெயரை சொல்லி திட்டியுள்ளனர். மேலும் அவர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் வல்லம் பேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசிகவினர் புகார்
மாவட்ட வருவாய் அலுவலரிடம் விசிகவினர் புகார்

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தமிழன் தலைமை வகித்தார். இதில் பங்கேற்ற கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து வல்லம் போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தி தஞ்சை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மனு அளிக்குமாறு அறிவுறுத்தினர். பின்னர், தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த வல்லம் புதூர் ஊராட்சி தலைவர் சாரதா மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அங்கு ஆட்சியர் தீபக் ஜேக்கப் இல்லாததால், மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தனர்.

வல்லம் புதூர் ஊராட்சித் தலைவர் சாரதா
வல்லம் புதூர் ஊராட்சித் தலைவர் சாரதா

பின்னர் மேலிட பொறுப்பாளர் இடிமுரசு செய்தியாளர்களிடம் பேசிய போது, ”தொடர்ச்சியாக தஞ்சை மாவட்டத்தில் தலித் ஊராட்சி மன்ற தலைவர்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜனிடம் இதுகுறித்து மனு அளிக்கப்பட்டது. அதற்கு அவர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார். தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை கைது செய்யாவிடில் விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் வல்லம் பகுதியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.” என்று அவர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

ஆளுநர் மீது இளம்பெண் பாலியல் புகார்.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!

தமிழ்நாட்டில் பொதுத்தேர்வைத் தவற விட்டவர்களுக்கு குட்நியூஸ்... 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு விரைவில் துணைத்தேர்வு!

நடுரோட்டில் ஓட ஓட விரட்டி மனைவியைக் குத்திக் கொலை செய்த கணவன்... பெங்களூருவில் பரபரப்பு!

ஒரே நாளில் 3 பேர் வெயிலில் சுருண்டு விழுந்து உயிரிழப்பு!

வளைகாப்புக்குச் சென்ற போது விபரீதம்... ரயிலில் இருந்து தவறி விழுந்து கர்ப்பிணி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in