ஒரு போராட்டத்தின் சின்னமாகவே ஆக்கப்பட்டது 'பானை'... திருமாவளவன் சூளுரை!

பானை சின்னத்துடன் திருமாவளவன்
பானை சின்னத்துடன் திருமாவளவன்

"ஒரு போராட்டத்தின் சின்னமாகவே ஆக்கப்பட்டது 'பானை'. சிதம்பரத்திலும், விழுப்புரத்திலும் மக்கள் ஆதரவுடன் வெற்றியின் சின்னமாக ஆகிடும் நாள் வெகுதொலைவில் இல்லை" என்று விசிக தலைவர் திருமாவளவன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில தேர்தல்களில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, பானை சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு திருமாவளவன் வெற்றிப் பெற்றார். அதேபோல, 2021 சட்டமன்றத் தேர்தலில் 6 தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 4 தொகுதிகளில் வென்றது. தற்போது 2024 மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக, சிதம்பரம் மற்றும் விழுப்புரம் தொகுதிகளில் போட்டியிடுகிறது. விசிக தலைவர் திருமாவளவன் சிதம்பரம் தொகுதியிலும், பொதுச் செயலாளர் துரை.ரவிக்குமார் விழுப்புரம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர்.

பானை சின்னத்துடன் திருமாவளவன்
பானை சின்னத்துடன் திருமாவளவன்

மேலும், கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தெலங்கானா, மகாராஷ்டிரா மாநிலங்களிலும் விசிக போட்டியிடுகிறது. இந்தத் தேர்தலில் தங்களுக்கு பானை சின்னத்தை, பொதுவான சின்னமாக ஒதுக்கக் கோரி தேர்தல் ஆணையத்தில் விசிக சார்பில் மனு அளிக்கப்பட்டது. ஆனால் ஒரு சதவீதத்துக்கும் குறைவாக வாக்கு பெற்றதாகக் கூறி, விசிகவின் கோரிக்கையை ஏற்க தேர்தல் ஆணையம் மறுத்தது. இதை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் விசிக முறையிட்டு, பல்வேறு சட்டப் போராட்டங்களுக்கு பிறகு பானை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது.

தற்போது அரசியல் களத்தில் பானை சின்னத்தை வைத்து விசிக தொண்டர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், விசிக தலைவர் தனது எக்ஸ் தளத்தில், 'ஒரு போராட்டத்தின் சின்னமாகவே ஆக்கப்பட்டது இந்த 'பானை'. சிதம்பரத்திலும், விழுப்புரத்திலும் மக்கள் ஆதரவுடன் வெற்றியின் சின்னமாக ஆகிடும் நாள் வெகுதொலைவில் இல்லை' என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...    

‘என்னது... நாடு தீப்பற்றி எரியுமா? இதுதான் ஜனநாயகத்தின் மொழியா?’ ராகுலுக்கு எதிராக குமுறும் மோடி

வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஸ்டாலின்... மு.க.அழகிரியின் மகன் உடல்நிலை பற்றி விசாரித்தார்!

முதல்வர் மாற்றம்... கேஜ்ரிவால் இல்லத்தில் குவியும் ஆம் ஆத்மி எம்எல்ஏ-க்கள்!

‘காஷ்மீரின் ஒரு பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க காரணம் நேரு’ அமித் ஷா அடுத்த அட்டாக்

காதல் வலையில் சிக்கிய ஷாருக்கான் மகன்... பிரேசிலியன் நடிகையுடன் காதலா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in