உறுதிப்படுத்தாமல் குற்றச்சாட்டை கூறாதீர்கள்... சசிதரூரை எச்சரித்த தேர்தல் அலுவலர்!

சசிதரூர்
சசிதரூர்

குற்றச்சாட்டுகளை உறுதிப்படுத்தாமல் கூறாதீர்கள் என, திருவனந்தபுரம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிதரூருக்கு தேர்தல் அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கேரள மாநிலம், திருவனந்தபுரம் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சசிதரூர் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து இத்தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் போட்டியிடுகிறார். முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடுவதால் இந்தத் தொகுதியின் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பதில் போட்டி தீவிரமாக உள்ளது. மேலும், முன்னாள், இன்னாள் அமைச்சர்கள் போட்டியிடுவதால் அனைவரும் கூர்ந்து கவனிக்கப்படும் தொகுதியாகவும் திருவனந்தபுரம் மாறியுள்ளது.

சசிதரூர், ராஜீவ் சந்திரசேகர்
சசிதரூர், ராஜீவ் சந்திரசேகர்

தொகுதி முழுவதும் காங்கிரஸ், பாஜக சார்பில் பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்நிலையில், சமீபத்தில் மலையாள செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த சசிதரூர், ராஜீவ் சந்திரசேகர் வாக்காளர்களுக்கும் மதத் தலைவர்களுக்கும் பணம் கொடுத்ததாக குற்றம் சாட்டினார். இது உண்மைக்குப் புறம்பானது மற்றும் தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது என கூறி, பாஜக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகார் குறித்து திருவனந்தபுரம் சார் ஆட்சியரும், தேர்தல் அலுவலருமான அசுவதி சீனிவாஸ் விசாரணை நடத்தினார். அப்போது சசிதரூர் தரப்பில் இருந்து, பேட்டியின் எந்தப் பகுதியிலும், வேட்பாளர் அல்லது கட்சியின் பெயர் குறிப்பிடப்படவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டது. இதேபோல் நேர்காணலின் எந்தப் பகுதியும் எடிட் செய்யப்படவில்லை; அப்படியே வெளியிடப்பட்டது என டிவி சேனல் தரப்பிலிருந்து பதில் அளிக்கப்பட்டது.

திருவனந்தபுரம் தேர்தல் அலுவலர் அசுவதி சீனிவாஸ்
திருவனந்தபுரம் தேர்தல் அலுவலர் அசுவதி சீனிவாஸ்

இந்நிலையில், தேர்தல் அலுவலர் அசுவதி கூறுகையில், “பேட்டியில் கூறப்படும் தகவல்கள், ராஜீவ் சந்திரசேகரை தான் குறிப்பிடுகின்றன என்பதை அதனை காணும் யாரும் அறிந்துகொள்ள முடியும். சரிபார்க்கப்படாத குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் மற்ற கட்சிகள் அல்லது அவர்களது தொண்டர்களை விமர்சிக்கக் கூடாது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in