சூடுபிடித்த தேர்தல்... மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், ஸ்மிருதி இரானி வேட்புமனு தாக்கல்!

ஸ்மிருதி இரானி, ராஜ்நாத் சிங்
ஸ்மிருதி இரானி, ராஜ்நாத் சிங்

உத்தரப் பிரதேச மாநிலம், அமேதி மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியும், லக்னோவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி உத்தரபிரதேச மாநிலம், அமேதி தொகுதியில் பாஜக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்தார். அப்போது மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் உடனிருந்தனர்.

அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி
அமேதி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி

வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு ஸ்மிருதி இரானி கூறுகையில், “தேர்தலில் பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை மக்கள் ஆசீர்வதிப்பார்கள்" என்றார்.

அமேதி தொகுதிக்கு வரும் மே 20ம் தேதி நடைபெறும் 5ம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. அக்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, வயநாடு தவிர இங்கும் போட்டியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல் பாஜக மூத்த தலைவரும், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவர் உத்தரப் பிரதேச மாநிலம், லக்னோ மக்களவைத் தொகுதியில் போட்டியிடுகிறார்.

லக்னோ தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்
லக்னோ தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்த மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்

ராஜ்நாத் சிங், வேட்பு மனு தாக்கல் நிகழ்வின்போது, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், உத்தராகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஆகியோர் உடனிருந்தனர். முன்னதாக லக்னோவில் பாஜக சார்பில் தேர்தல் பிரச்சார பேரணி நடைபெற்றது.

லக்னோவிலும் 5ம் கட்ட மக்களவைத் தேர்தலான மே 20ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இத்தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ரவிதாஸ் மெஹ்ரோத்ராவை ராஜ்நாத் சிங் எதிர்கொள்கிறார்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in