சாதி, மதம் பார்த்து வாக்களிக்காதீர்கள்... மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வேண்டுகோள்!

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி
மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

"காங்கிரஸ் தனது திட்டங்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடியவில்லை என்பதால், மக்களை குழப்ப முயற்சிக்கின்றனர். தேர்தலில் சாதி, மத அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம்" என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரையில் மூன்று கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதனால், பாஜக தலைவர்கள், காங்கிரஸை கடுமையாக விமர்சித்து மக்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலம் பீட் மக்களவைத் தொகுதி வேட்பாளரான பங்கஜா முண்டேவுக்கு ஆதரவாக மஜல்கான் நகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்து கொண்டார்.

பாஜக
பாஜக

அப்போது, பேசிய நிதின் கட்கரி, "காங்கிரஸ் கட்சி தனது ஆட்சியில் 80 முறை அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தியுள்ளது. பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொண்டால் அரசியல் சட்டத்தை மாற்றுவோம் என்று கூறி எதிர்க்கட்சிகள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறார்கள். காங்கிரஸின் தவறான பொருளாதாரக் கொள்கைகளால், நாட்டு மக்கள் ஏழைகளாகவே உள்ளனர். எதிர்க்கட்சிகள் மக்களை நம்பவைக்கத் தவறிவிட்டன. அதனால் அவர்கள் மக்களை குழப்பி வருகின்றனர். எதிர்க்கட்சித் தலைவர்கள் பாஜகதான், அரசியலமைப்பை மாற்றுவோம் என்று கூறுகின்றனர்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

அரசியலமைப்பை மாற்ற முடியாது, திருத்தங்கள் மட்டுமே செய்ய முடியும் என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு உள்ளது. இதுவரை 80 முறை அரசியல் சட்டத்தில் காங்கிரஸ் திருத்தம் செய்துள்ளது. கடைசி ஏழைக்கும் பயன் கிடைக்கும் வரை எங்கள் பணியை நிறுத்த மாட்டோம். காங்கிரஸின் தவறான பொருளாதார கொள்கைகளால் இந்த நாட்டில் மக்கள் ஏழைகளாக இருந்தனர். அவர்கள் எதையுமே செய்யவில்லை. எனவே, அவர்கள் செய்த திட்டங்களை முன்னிறுத்தி தேர்தலை சந்திக்க முடியவில்லை என்பதால், மக்களை குழப்ப முயற்சிக்கிறார்கள். தேர்தலில் சாதி அல்லது மத அடிப்படையில் வாக்களிக்க வேண்டாம்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!'

பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in