மோடியின் அலுவலக ஊழியராக தேர்தல் ஆணையம் இல்லை... எல்.முருகன் ஆவேசம்!

எல்.முருகன்
எல்.முருகன்
Updated on
1 min read

"மோடியின் அலுவலக ஊழியராக தேர்தல் ஆணையம் செயல்பட்டு இருந்தால் கர்நாடகா மற்றும் தமிழகத்தில் எவ்வாறு திமுக, காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்க முடியும்?" என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை, மீன்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் இன்று காஞ்சிபுரம் வருகை புரிந்தார். காஞ்சிபுரம் சங்கரமடத்திற்கு வருகை புரிந்து அவருக்கு சங்கர மடம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்ட பின், காஞ்சி சங்கர மடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சாமிகளை சந்தித்து ஆசி பெற்றார். அதனைத் தொடர்ந்து இருவரும் 15 நிமிடம் தனிமையில் உரையாடினர். அதன்பின் எல்.முருகனுக்கு, சங்கர மடம் சார்பில் சால்வை அணிவிக்கப்பட்டு, பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

விஜயேந்திர சரஸ்வதி சாமியிடம் ஆசி பெற்ற எல்.முருகன்
விஜயேந்திர சரஸ்வதி சாமியிடம் ஆசி பெற்ற எல்.முருகன்

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மக்களவைத் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெற்று பாஜக மிகப்பெரிய வெற்றிய பெறும். மூன்றாவது முறையாக பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்பார்.

தேர்தல் ஆணையம் மோடியின் அலுவலக பணியாளர் போல் செயல்படுவதாக இவி கே எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். தேர்தல் ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு. அப்படி மோடியின் சார்பாக செயல்பட்டிருந்தால் தமிழகம் மற்றும் கர்நாடகாவில் எப்படி திமுக மற்றும் காங்கிரஸ் ஜெயித்திருக்க முடியும். அரசியல்வாதிகள் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் தனது பணியை மேற்கொண்டு வருகிறது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

சாட்டையால் அடிவாங்கும் விநோத திருவிழா... பயபக்தியுடன் குவிந்த பக்தர்கள்

இன்று தேசிய சகோதரர்கள் தினம்... அண்ணன் - தம்பியாக பிறந்தவர்களும், வாழ்பவர்களும் கொண்டாட வேண்டிய தினம்!

பாஜகவின் டபுள் இஞ்சின் இம்முறை கட்டாயம் தடம் புரளும் -அகிலேஷ் யாதவ் ஆருடம்

அதிர்ச்சி... மினிபேருந்து மீது லாரி மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலி!

விடிய விடிய நடந்த விருந்தில் கொக்கெய்ன், ஹைட்ரோ கஞ்சா அடித்த நடிகைகள்... பெங்களூருவில் நடந்தது என்ன?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in