திரிணமூல் அரசின் ஊழல் 26,000 குடும்பங்களின் மகிழ்ச்சியை பறித்துள்ளது: மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடி சாடல்!

மால்டா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி
மால்டா தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி

மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஊழல், மாநிலத்தில் சுமார் 26,000 குடும்பங்களின் அமைதியையும் மகிழ்ச்சியையும் பறித்துள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம், மால்டாவில் பாஜக சார்பில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, “மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் ஊழல், மாநிலத்தில் சுமார் 26,000 குடும்பங்களின் அமைதியையும் மகிழ்ச்சியையும் பறித்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள 80 லட்சம் விவசாயிகளுக்கு மத்திய அரசு 8,000 கோடி ரூபாயை வழங்கியுள்ளது. ஆனால் திரிணமூல் அரசு தடைகளை உருவாக்கி வருவதால் விவசாயிகளுக்கு நிதி கிடைக்கவில்லை.

மால்டாவில் சாலை பேரணி சென்ற பிரதமர் மோடி
மால்டாவில் சாலை பேரணி சென்ற பிரதமர் மோடி

மாநிலத்தில் உள்ள அனைத்து மத்திய திட்டங்களையும் செயல்படுத்துவதை மாநில அரசு சீர்குலைக்க முயற்சிக்கிறது. ஆயுஷ்மான் பாரத் திட்டத்தை மேற்கு வங்கத்தில் செயல்படுத்த அவர்கள் அனுமதிக்கவில்லை. மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த மாம்பழ விவசாயிகளுக்கான திட்டங்கள் எங்களிடம் உள்ளன. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் தலைவர்கள் அங்கும் கமிஷனைக் கோருவார்கள் என நான் கவலைப்படுகிறேன்.

சந்தேஷ்காலியில் பெண்கள் துன்புறுத்தப்பட்டனர். மால்டாவிலும் இதே போன்ற சம்பவங்கள் நடந்ததாக செய்திகள் வந்தன. ஆனால் திரிணமூல் காங்கிரஸ் அரசு எப்போதும் குற்றம் சாட்டப்பட்ட நபர்களைக் காப்பாற்ற முயற்சித்துள்ளது. ஒருபுறம் திரிணமூல் காங்கிரஸ் மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக ஊடுருவுவதை ஊக்குவித்து வருகிறது.

மறுபுறம், காங்கிரஸ் சாமானிய மக்களிடமிருந்து பணத்தை பறித்து தங்கள் வாக்கு வங்கியின் ஒரு பகுதியாக இருப்பவர்களுக்கு மட்டுமே விநியோகிக்க திட்டமிட்டுள்ளது. காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் ரகசிய கூட்டாளிகள்.

மேற்கு வங்கத்தில் அரசுப் பள்ளிகளில் 25,753 ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணிக்கு, மாநில அரசால் கடந்த 2016ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட நியமனங்களை, முறைகேடு புகாரில் சமீபத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதனை குறிப்பிட்டே மாநிலத்தில் 26 ஆயிரம் குடும்பங்களின் மகிழ்ச்சி திரிணமூல் அரசின் ஊழலால் பறிக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in