ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த மம்தா பானர்ஜி... பதற வைக்கும் வீடியோவால் கலங்கும் தொண்டர்கள்

ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்ல ஹெலிகாப்டரில் ஏறும் போது தவறி விழுந்த வீடியோ காட்சிகள் வெளியாகி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 மக்களவைத் தொகுதிகளுக்குமான தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இதையொட்டி, அங்கு தேர்தல் பிரச்சாரம் அனல் பறக்கிறது. 42 தொகுதிகளிலும் போட்டியிடும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில், திரிணமூல் காங்கிரஸ் கட்சி, பாஜக ஆகியவை தனித்தும், இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளும், போட்டியிடுகின்றன. பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி, தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

துர்காபூரில் இருந்து அசன்சோல் செல்ல ஹெலிகாப்டரில் ஏறிய் போது விபத்து - லேசான காயம் ஏற்பட்டதாக தகவல்
துர்காபூரில் இருந்து அசன்சோல் செல்ல ஹெலிகாப்டரில் ஏறிய் போது விபத்து - லேசான காயம் ஏற்பட்டதாக தகவல்

இதன் ஒரு பகுதியாக அசான்சோல் தொகுதியில் பிரச்சாரத்திற்கு செல்வதற்காக துர்காபூர் பகுதியிலிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இன்று மதியம் கிளம்பினார். பாசிம் பர்தமான் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் நின்று கொண்டிருந்த ஹெலிகாப்டரில் பாதுகாவலர்கள் புடைசூழ அவர் ஏறினார். ஹெலிகாப்டரின் இருக்கையில் அவர் அமர முயன்ற போது, திடீரென நிலைதடுமாறி ஹெலிகாப்டருக்கு உள்ளேயே தவறி விழுந்தார். உடனடியாக அவருக்கு பாதுகாவலர்கள் உதவி செய்தனர்.

இந்த சம்பவத்தில் அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவர் பயணத்தை ரத்து செய்யாமல், ஹெலிகாப்டரில் கிளம்பிச்சென்றார். மம்தா பானர்ஜி ஹெலிகாப்டருக்குள் தவறி விழும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது. இதைப்பார்த்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அதிர்ச்சி அடைந்து கவலையில் ஆழ்ந்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மம்தா பானர்ஜி, மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் தேர்தல் பிரச்சாரத்திற்கு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in