இந்த தேர்தல் ராம பக்தர்களுக்கும் ராம துரோகிகளுக்கும் இடையிலானது... யோகி ஆதித்யநாத் பிரச்சாரம்!

தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்
தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் யோகி ஆதித்யநாத்

தற்போதைய ம்க்களவைத் தேர்தல் ராம பக்தர்களுக்கும், ராம துரோகிகளுக்கும் இடையேயானது ஆகும் என உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

பீகாரின் பெகுசராய் மக்களவைத் தொகுதியில் மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கை ஆதரித்து நடைபெற்ற பேரணியில் பேசிய உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், “தற்போதைய தேர்தல் ராம பக்தர்களுக்கும் ராம துரோகிகளுக்கும் இடையேயானது ஆகும். நான் ராமரின் தேசத்தில் இருந்து வருகிறேன். சீதா தேவியின் பிறப்பிடமான பீகார் மக்களின் இதயங்களில் அயோத்தி கோயிலுக்கு தனி இடம் உண்டு என்பதை நான் அறிவேன்.

உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்

பசுக் கொலையை ஊக்குவிப்பதன் மூலமும், முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதன் மூலமும், மத அடிப்படையில் நாட்டைப் பிரிப்பதற்காகவும் நிற்கும் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிள்தான் "ராம துரோகிகள்" ஆவர். ராம துரோகிகள், ராம பக்தர்களின் மீது துப்பாக்கி குண்டுகள் வீசினார்கள். மாஃபியாக்களின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்தார்கள்” என்று கூறினார்

யோகி ஆதித்யநாத் மற்றும் மோடி
யோகி ஆதித்யநாத் மற்றும் மோடி

மேலும், "பாபா சாகேப் அம்பேத்கரின் அரசியலமைப்புக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்து, மத அடிப்படையில் நாட்டைப் பிளவுபடுத்தும் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளனர். முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால், எங்கள் தலித்துகள் மற்றும் ஓபிசிக்கள் எங்கே போவார்கள். சச்சார் கமிட்டியை அமைத்து ஆட்சியில் இருந்தபோது சதியைத் தொடங்கியது காங்கிரஸ்" என்று அவர் தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in