அடுத்ததாக மோடிதான் பிரதமர்... அடித்துச் சொல்லும் திருவாவடுதுறை ஆதீனம்!
மூன்றாவது முறையாகவும் தேர்தலில் வெற்றி பெற்று நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார் என திருவாவடுதுறை ஆதீனம் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். நாடு சுதந்திரம் பெற்றபோது திருவாவடுதுறை ஆதீனத்திடம் இருந்து செங்கோல் பெறப்பட்டது. அதன் பின்னர் சுமார் 75 ஆண்டுகளுக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சிக்கு பின் மீண்டும் நம்மிடம் இருந்து செங்கோல் பெறப்பட்டு புதிய நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ளது.

இது நமக்கு கிடைத்த பெருமை. நாட்டில் மீண்டும் செங்கோல் ஆட்சி வந்துள்ளது. எனவே நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வருவார்" என்று திருவாவடுதுறை ஆதினம் தெரிவித்துள்ளார்.
புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் செங்கோலை நிறுவியபோது திருவாடுதுறை ஆதினகர்த்தர் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். அவர்களிடம் இருந்துதான் பிரதமர் செங்கோலை பெற்றுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் வாசிக்கலாமே...
மிஸ் பண்ணாதீங்க ... ஆவின் தீபாவளி காம்போ ஆஃபர் அறிவிப்பு!
நடுரோட்டில் பற்றி எரிந்த பள்ளி வேன்... அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய குழந்தைகள்!
நடிகை அமலாபால் 2வது திருமணம்... லிப் கிஸ் கொடுத்து காதலனை அறிமுகப்படுத்தினார்!