திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும்... திருமாவளவன் நம்பிக்கை!

திருமாவளவன்
திருமாவளவன்

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணி 40-க்கு 40 இடஙகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறினார்.

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம் பெற்றுள்ளது. இக்கட்சியின் சார்பில் திருமாவளவன், துரை ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்த நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தனது சொந்த கிராமமான அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள அங்கனூர் அரசு நடுநிலைப் பள்ளியில் தனது தாயாருடன் வரிசையில் நின்று வாக்கினைப் பதிவு செய்தார்.

திருமாவளவன்
திருமாவளவன்

இதன் பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், " இந்த பொது தேர்தல். இரண்டு கட்சிகளுக்கும் இடையே நடக்கும் அதிகார போட்டி அல்ல. ஒருபுறம் இந்திய நாட்டு மக்கள், இன்னொரு புறம் நாட்டுக்கு எதிரான சங்பரிவார் கும்பல். எனவே, சங்பரிவாருக்கும், நாட்டு மக்களுக்கும் இடையே நடக்கிற ஒரு தர்மயுத்தம்.

இதில் நாட்டு மக்கள் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக மக்களின் பக்கம் இந்தியா கூட்டணி இருக்கிறோம். இந்த கூட்டணிக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தைப் பாதுகாக்க வாக்களியுங்கள் என்று நாட்டு மக்களுக்கு அழைப்புகள் விடுத்துள்ளோம்.

திருமாவளவன்
திருமாவளவன்

அரசியலமைப்பு சட்டத்தை ஒரு பொருட்டாக மதிக்காமல் ஜனநாயக விழுமியங்களைச் சிதைக்க துடிக்கிற சங் பரிவார் கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது. இதனால் தான், ஜனநாயகத்தையும், அரசியலப்பு சட்டத்தையும் பாதுகாக்க வேண்டும் என்ற பெரும் கவலையோடு இந்தியா கூட்டணி களத்தில் நிற்கிறது.

நாடு முழுவதும் இந்திய கூட்டணிக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. தமிழ்நாடு, புதுச்சேரியில் திமுக தலைமையிலான மதசார்பற்ற கூட்டணி 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in