அடுத்த 5 ஆண்டுகளில் எடுக்கப்படாத முடிவுகள் எடுக்கப்படும்... சஸ்பென்ஸ் வைத்த அண்ணாமலை!

கோவையில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பு
கோவையில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பு

அரசியல் காரணங்களுக்காக எடுக்கப்படாத முடிவுகள் அடுத்த 5 ஆண்டு காலத்தில் எடுக்கப்படும் என கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் அண்ணாமலை மருதமலை அடிவாரத்தில் சாமி கும்பிட்டபின் தனது பிரசாரத்தை இன்று தொடங்கினார். அப்போது மக்களிடையே பேசிய அவர், “ இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல். யார் பிரதமராக ஜெயிக்க போகின்றார் என தெரிந்து நடைபெறும் தேர்தல். 2024-2029 காலம் வளருகின்ற இந்தியா வளர்ந்த இந்தியாவாக மாறப்போகும் காலம்.

இந்த முறை 400 எம்பி-க்களைத் தாண்டி அமர வேண்டும். இந்த காலக்கட்டத்தில் ஆர்டிகிள் 370, ராமர் கோயிலை தாண்டி முக்கிய முடிவு இருக்கிறது. அரசியல் காரணங்களுக்காக இதுவரை எடுக்கப்படாத முடிவுகள் இந்த காலத்தில் எடுக்கப்படும். முக்கியமாக நதி நீர் இணைப்பு இந்த காலக்கட்டத்தில் செய்யப்போகிறோம்.” என்றார்.

கோவையில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பு
கோவையில் அண்ணாமலை தீவிர வாக்கு சேகரிப்பு

மேலும், “ஆனைமலையாறு நல்லாறு திட்டத்தை நிறைவேற்ற 10 ஆயிரம் கோடி தேவைப்படும். அதை செய்ய போகிறோம். பிரதமருக்கு கண்ணுக்கு எட்டியதூரம் வரை எதிரிகள் இல்லை. கோவையில் 20 ஆண்டு காலமாக வளர்ச்சி தேங்கிய நிலையில் இருக்கிறது. இங்கிருந்த எம்.பி.,க்களுக்கு தொலைநோக்கு பார்வை இல்லை. பிரதமரை எப்படி பயன்படுத்துவது என தெரியாமல் இருந்திருக்கின்றனர். தேங்கியிருக்கும் திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும். கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1,040 கோடி பணம் கொடுத்தும் கூட அது முறையாக பயன்படுத்தபடுகின்றதா என தெரியவில்லை.” என்றார்.

கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவனை அழைத்து கைக்குலுக்கிய அண்ணாமலை
கிருஷ்ணர் வேடமணிந்த சிறுவனை அழைத்து கைக்குலுக்கிய அண்ணாமலை

தொடர்ந்து பேசிய அவர், “திமுகவை பற்றி நாம் பேசாத பேச்சில்லை. இன்னும் 16 நாட்களில் மட்டும் பேசி எதுவும் ஆகப்போவதில்லை. ஓரே ஒரு வண்டி மட்டும் நேரடியாக டெல்லி செல்கிறது. மற்ற கட்சிகளைப் பற்றி பேச தயாராக இல்லை.” என்றார். தொடர்ந்து கோவை வடக்கு சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் அண்ணாமலை, கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் வாக்கு சேகரித்தனர். அப்போது கிருஷ்ணர் வேடமணிந்த 4 வயது சிறுவன் சர்வேஷ் என்பவர் அண்ணாமலை மாமா என்று அழைத்தார். அவரை அருகில் அழைத்து அண்ணாமலை கைகுலுக்கினார்.

இதையும் வாசிக்கலாமே...    


வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in