மேடையில் கண்ணீர் விட்டு கதறியழுத அமைச்சர் கணேசன்... திகைத்துப்போன பெண்கள்!

கைம்பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழாவில் அமைச்சர் கணேசன்
கைம்பெண்களுக்கு தையல் இயந்திரம் வழங்கும் விழாவில் அமைச்சர் கணேசன்

மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே இறந்து போன தன் மனைவியை நினைத்து கண்ணீர் விட்ட அமைச்சர் கணேசனை  அங்கிருந்த பெண்கள் சமாதானப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பவானி அம்மாள் மறைவின் போது அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்
பவானி அம்மாள் மறைவின் போது அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்

கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்துள்ள கழுதூரில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் சார்பில் கணவனை இழந்த பெண்கள் இரண்டாயிரம் பேருக்கு, தையல் இயந்திரம்   வழங்கும் விழா நேற்று  நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அமைச்சர் கணேசன் பயனாளிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார். 

நிகழ்ச்சியில் பேசிய அவர், "நான் மனைவியை இழந்து வாழ்வது போல் நீங்கள் கணவனை இழந்து வாழ்வது எவ்வளவு சிரமம் என்று எனக்குத் தெரியும். கணவனை இழந்த உங்களின் வலி, மனைவியை இழந்து வாழும் எனக்கு நன்கு தெரியும்" என்று கூறி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன், மேடையில் கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. 

அமைச்சர் வெ.கணேசன்
அமைச்சர் வெ.கணேசன்

அப்போது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள் பலரும் கண்ணீர் விட்டு அழுதனர். அவர்களில் சில பெண்கள், ஐயா அழாதீங்க, என்று கூறி அமைச்சருக்கு ஆறுதல் அளித்து சமாதானப்படுத்தினர். அமைச்சரின் மனைவி பவானி அம்மாள் கடந்த 2021-ம் ஆண்டு டிசம்பர் மாதம் மாரடைப்பு காரணமாக மரணம் அடைந்தார்.

மனைவி மீது மிகுந்த பாசம் வைத்திருந்த அமைச்சர் கணேசன் இதனால் மிகவும் வாடிப்போனார். அதற்கு ஓராண்டுக்கு முன் அவரது மூத்த மகளும் உயிரிழந்த நிலையில் அவர் பெரும் துயரத்தில் இருந்து வருகிறார். இந்த நிலையில் பொது மேடையில் பலரது முன்னிலையில் அவர் மனைவியை நினைத்து கண்ணீர் விட்டு அழுதது அனைவரையும்  நெகிழச் செய்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


பெங்களூரு குண்டுவெடிப்பு எதிரொலி... 7 மாநிலங்களில் NIA தீவிர சோதனை!

எம்ஜிஆர் பிரச்சாரத்தையும் மீறி அதிமுக வேட்பாளரை தோற்கடித்த இரட்டை இலை... 1977 தேர்தல் சுவாரஸ்யம்!

அதிரடி... ஸ்பாட்டிஃபை வழக்கில் ஆப்பிள் நிறுவனத்திற்கு ரூ16,500 கோடி அபராதம்!

காதல் மனைவி தற்கொலை... வேதனையில் ஆசிட் குடித்து கணவர் உயிரை விட்ட பரிதாபம்!

அதிர வைத்த 'ஆபரேஷன் லோட்டஸ்'... காங்கிரஸ் கூண்டோடு காலி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in