குற்ற வழக்கை மறைத்த நயினார் நாகேந்திரன்... வழக்கை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்!

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனுவை ஏற்றதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் நயினார் நாகேந்திரன் போட்டியிடுகிறார். இதற்காக அவர் தாக்கல் செய்த வேட்புமனுவில் தன் மீதான வழக்குகளை மறைத்துவிட்டதாகச் சொல்லி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

அதில் ' நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுவில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் தன் மீது பதிவான குற்ற வழக்கு தொடர்பான தகவலை மறைத்துள்ளார். தனது சொத்துக் கணக்கையும் மறைத்துள்ளார். இது தேர்தல் விதிகளுக்கு எதிரானது. எனவே அவரது வேட்பு மனுவை ஏற்கக்கூடாது என தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்தோம். ஆனால், நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, நயினார் நாகேந்திரனின் வேட்பு மனுவை நிராகரிக்க உத்தரவிட வேண்டும்' என்று கூறப்பட்டது.

சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

இந்த மனு மீதான விசாரணை, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கங்கபூர்வாலா, நீதிபதி சத்ய நாராயண பிரசாத் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், "ஏப்ரல் 19 தேர்தலுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் சேர்ப்பு பணிகள் முடிந்து தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவடைந்து விட்டது. தற்போது இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது.

மேலும், மனுதாரர் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை, அவர் திருநெல்வேலி தொகுதி வாக்காளரும் இல்லை" என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.

இந்த உத்தரவால் நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்கள் தற்போதைக்கு நிம்மதி அடைந்துள்ளனர். எனினும் 4 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம், நயினார் நாகேந்திரனுக்கு பெரிய தலைவலியையும், பெரும் சிக்கலையும் ஏற்படுத்தலாம் என்று கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

 

சிங்கப்பூர் பிரதமர் திடீர் ராஜினாமா அறிவிப்பு... ஊழல் குற்றச்சாட்டுகள் எதிரொலி!

நயினார் நாகேந்திரன் வேட்புமனு நிராகரிக்கப்படுமா?... உயர் நீதிமன்ற வழக்கால் புதிய சிக்கல்!

39 தொகுதிகளிலும் திமுக கூட்டணிக்கே வெற்றி... தமிழ்நாட்டில் லோக் போல் நடத்திய பரபரப்பு கருத்துக்கணிப்பு!

பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக் கொண்டு தலைகீழாக பாய்ந்த பேருந்து... 5 பேர் உயிரிழப்பு: 40 பேர் படுகாயம்!

மயிலாடுதுறையில் கரை ஒதுங்கிய மர்மப்பொருள்... மீனவர்கள் அச்சம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in