அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி கல்லூரி உரிமத்தை ரத்து செய்யும் விவகாரம்... உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு!

அமைச்சர் எ.வ.வேலு
அமைச்சர் எ.வ.வேலு

பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவின் மனைவி தலைவராக உள்ள கல்லூரிக்கு வழங்கப்பட்ட உரிமத்தை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், மாத்தூரில் சரஸ்வதி அம்மாள் கல்வி அறக்கட்டளைக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி உள்ளது. இதன் தலைவராக அமைச்சர் எ.வ.வேலுவின் மனைவி ஜீவா இருக்கிறார். இந்தக் கல்லூரியானது அரசு புறம்போக்கு நிலம் மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளதால் இதன் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என திருவண்ணாமலையைச் சேர்ந்த டி.எஸ். சங்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி ஜெ.சத்தியநாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு புறம்போக்கு மற்றும் நீர்நிலையை ஆக்கிரமித்து கல்லூரி கட்டப்படவில்லை என கல்லூரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் வாதிட்டார்.

இதை ஏற்றுக்கொண்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், 20 ஏக்கர் பரப்பில் கல்லூரி அமைக்கப்பட வேண்டும் என்ற விதியை மீறி, ஏழு ஏக்கரில் மட்டுமே கல்லூரி அமைந்துள்ளதாக தெரிவித்தார். இதனையடுத்து, ”இந்த விவகாரத்தில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுமம் ( AICTE) தான் நடவடிக்கை எடுக்க முடியும்” என்று சொல்லி நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் வாசிக்கலாமே...


அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in