அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு? - அதிரடியாய் கேள்வி கேட்ட உயர் நீதிமன்றம்!

உயர்நீதிமன்ற மதுரை கிளை
உயர்நீதிமன்ற மதுரை கிளை

மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு போலீஸ் பாதுகாப்பு எதற்கு என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை அதிரடியாக கேள்வி எழுப்பியுள்ளது.

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சிக் கழக தலைவர்
அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சிக் கழக தலைவர்

அகில இந்திய மக்கள் மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியின் தலைவர் பொன்.முருகேசன்,  தனக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க உத்தரவிடக் கோரி மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை, “மக்களுக்கு சேவையாற்ற அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு எதற்கு” என்று கேள்வி எழுப்பி உள்ளது.

உயர் நீதிமன்றக் கிளை, “அரசியல்வாதிகளுக்கு பாதுகாப்பு எதற்கு?. அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. மக்களுக்கு சேவையாற்றத்தான் அரசியல்வாதிகள் அரசியலில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை.

முருகேசன்
முருகேசன்

தேசிய கட்சிக்கு தலைவராக இருக்கும் முருகேசனுக்கு காவல்துறை பாதுகாப்பு எதற்கு?, அப்படி பாதுகாப்பு தேவை என்றால் உங்களின் பாதுகாவலர்களை வைத்து பாதுகாத்துக் கொள்ளலாமே' என அறிவுறுத்தியுள்ளது. மேலும் தனக்கு பாதுகாப்பு வழங்கக்கோரிய அவரது மனுவையும் உயர் நீதிமன்ற கிளை தள்ளுபடி செய்தது.

இதையும் வாசிக்கலாமே...   

கார் விபத்தில் சிக்கிய அஜித்... ’விடாமுயற்சி’க்காக உயிரை பணயம் வைத்து ரிஸ்க்; வைரல் வீடியோ!

சமுதாயத்தில் 60 சதவீதம் பேர் கெட்டவர்கள் தான்... இயக்குநர் ஹரி பரபர பேச்சு!

ஜஸ்ட் மிஸ்... பிரச்சாரத்தின் போது மாட்டுவண்டியில் இருந்து தவறி விழுந்த தேமுதிக வேட்பாளர்!

விஷத்தை சாக்லேட்டில் நனைத்து சாப்பிட்ட தம்பதி.. காருக்குள் இறந்து கிடந்த மனைவி!

மனைவி டார்ச்சர் தாங்கல... விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்ற மாஸ்டர் செஃப் பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in