
தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் ஆகியவை இன்று முதல் தொடங்குகிறது.
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர், அக்டோபரில் வாக்காளர் பட்டியல் திருத்தும் பணிகள் நடைபெறும். பின்னர் ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும். அடுத்த ஆண்டு மே மாதத்தில் லோக்சபா தேர்தல் நடைபெறும் நிலையில் இந்த ஆண்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாக உள்ளது.
இன்று வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில் அப்பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்தம், நீக்கம் ஆகியவையும் இன்றே தொடங்கப்பட உள்ளது. 17 வயது நிரம்பியவர்கள் அனைவருமே வாக்காளர் பட்டியலில் தங்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பின்னர் வாக்காளர் அடையாள அட்டையை தேர்தல் ஆணையம் வழங்கும்.
நவம்பர் மாதத்தில் மொத்தம் 4 நாட்கள் சிறப்பு முகாம்களும் நடத்தப்படும். இந்த சிறப்பு முகாம்களிலும் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை வழங்கலாம். தற்போதைய நிலையில் தமிழ்நாட்டில் வரைவு வாக்காளர் பட்டியல் முதல் விண்ணப்பங்கள் பெறுதல் வரையிலான பணிகள் டிசம்பர் 9ம்தேதி முடிவடையும். பின்னர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அதாவது ஜனவரி 5ம்தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது.
இதையும் வாசிக்கலாமே...
முன்னாள் பிரதமர் மாரடைப்பால் மரணம்... சோகத்தில் நாட்டு மக்கள்!
அதிர்ச்சி... சேலம் ஆர் ஆர் பிரியாணி கடைக்கு பூட்டு போட்ட அதிகாரிகள்!
மகன் சாவில் மர்மம்... கண்டுகொள்ளாத போலீஸ்; வேதனையில் தாய், மகள் தற்கொலை
நாளை சந்திர கிரகணம்... குரு சந்திர யோகமும்... ராசிகளின் கூட்டணியும்!
இஸ்ரேல் குண்டுவீச்சில் குடும்பமே பலி... அடுத்த நாளே போர்க்களத்தில் களமிறங்கிய செய்தியாளர்!