ரம்ஜான் வரை கெடு... இம்ரான் கானின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்தது நீதிமன்றம்!

இம்ரான் கான்
இம்ரான் கான்

அரசின் பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புஷ்ரா பிவி, இம்ரான் கான்
புஷ்ரா பிவி, இம்ரான் கான்

கடந்த 2018 முதல் 2022ம் ஆண்டு வரை பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக இம்ரான்கான் இருந்தார். அப்போது, வெளிநாட்டு தலைவர்கள், பிரமுகர்கள் பிரதமருக்கு அளித்த பரிசுப் பொருட்களை அரசிடம் ஒப்படைக்காமல் விற்று ஊழல் செய்ததாக இம்ரான்கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பிவி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நாட்டின் சிறப்பு நீதிமன்றம், இம்ரான்கான் மற்றும் அவரது மனைவிக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அதேபோல, அரசு ரகசியங்களை கசிய விட்ட வழக்கிலும் இம்ரான் கானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோப்புப்படம்
கோப்புப்படம்

இதுபோல பல வழக்குகளில் தண்டனை பெற்றுள்ள இம்ரான்கான் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார். இந்நிலையில், அரசின் பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்ற வழக்கில் அளிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கும்படி, இம்ரான்கான் சார்பில் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், இம்ரான்கானின் சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. ரம்ஜான் விடுமுறைக்கு பின் வழக்கில் விசாரணை நடத்தி முடிவெடுக்கும் வரை தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாக அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...    

நடிகை சரண்யா பொன்வண்ணன் மீது வழக்கு... கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்!

பரபரப்பு... பாஜக எம்எல்ஏவை கத்தியால் குத்திக் கொல்ல முயற்சி!

அதிர்ச்சி... அருணாச்சலப் பிரதேசத்தின் 30 இடங்களின் பெயரை மாற்றி அறிவித்தது சீனா!

கிளாமர் ஒன்றும் கீழ்த்தரம் இல்லை; கொண்டாட்டம் தான்... மனம் திறந்த தமன்னா!

நடத்தையில் சந்தேகம்... மனைவி, 2 குழந்தைகளைக் கொன்று 3 நாட்களாக சடலங்களுடன் வசித்த வாலிபர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in