தெலங்கானாவில் தேர்தல் விதிகளை மீறும் ரேவந்த் ரெட்டி; கதறும் பிஆர்எஸ்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

தெலங்கானாவில் காங்கிரஸ் அரசின் முதல்வர் ரேவந்த் ரெட்டி தேர்தல் நடத்தை விதிகளை மீறி, அரசியலமைப்புக்கு முரணான வாக்குறுதிகளை அளித்து வருவதாக பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) குற்றம் சாட்டியுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தெலங்கானாவில் அனல் பறக்கும் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த ஆண்டு இறுதியில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. முதல்வராக ரேவந்த் ரெட்டி உள்ளார். இந்நிலையில், மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் ரேவந்த் ரெட்டி, தேர்தல் நடத்தை விதிகளை மீறி, வரும் ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதாக பேசி வருகிறார் என, பாரத் ராஷ்டிர சமிதி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

இது தொடர்பாக ரேவந்த் ரெட்டி விதிகளை மீறி பேசும் வீடியோவை இணைத்து தேர்தல் ஆணையத்திடம் அக்கட்சி புகார் அளித்துள்ளது. ஆனால், இது தொடர்பாக உடனடியாக தேர்தல் ஆணையம் நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக பிஆர்எஸ் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் தாசோஜு ஸ்ரீவன் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேர்தல் ஆணையத்திடம் நாங்கள் புகார் அளித்துள்ள வீடியோவில் இந்து தேவியான சரஸ்வதிக்கு உறுதியளித்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் பயிர்க் கடனை தள்ளுபடி செய்வதாக ரேவந்த் ரெட்டி உறுதியளிக்கிறார். இது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது மற்றும் வெட்கக்கேடானது. மேலும், தேர்தல் நடத்தை விதிகள், 1951ம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு விரோதமானதாகும்.

இந்திய தேர்தல் ஆணையம்
இந்திய தேர்தல் ஆணையம்

இதில் ஆச்சரியம் என்னவென்றால் விதிகளை மீறிய முதல்வர் மீது தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வெறும் பார்வையாளராக மட்டுமே உள்ளது. ஏன் இந்த அலட்சியம்? தேர்தல் ஆணையத்துக்கும் ரேவந்த் ரெட்டிக்கும் ஏதேனும் தொடர்புகள் உள்ளதா? நியாயமான மற்றும் சுதந்திரமான தேர்தலை நடத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டுள்ளார்.

தெலங்கானாவில் வரும் மே 13ம் தேதி நடைபெறும் 4ம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in