அர்விந்த் கேஜ்ரிவாலை டெல்லி முதல்வர் பதவியிலிருந்து நீக்கக்கோரிய மனு... உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

டெல்லி முதல்வர் பதவியிலிருந்து அர்விந்த் கேஜ்ரிவாலை நீக்கக்கோரும் மனுவினை விசாரித்த உச்ச நீதிமன்றம், கேஜ்ரிவாலுக்கு ஆதரவான தீர்ப்பினை வழங்கியுள்ளது.

டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால் தற்போது இடைக்கால ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இதனிடையே கேஜ்ரிவால் வகித்து வரும் டெல்லி முதல்வர் பொறுப்பிலிருந்து அவரை நீக்கக்கோரும் மனுவினை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

மதுபானக் கொள்கை முறைகேடு மோசடி வழக்கு, நிதி மோசடி விவகாரங்கள் தொடர்பான புகார்களின் அடிப்பையில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அர்விந்த் கேஜ்ரிவால், இந்த புகார்கள் மற்றும் அவை தொடர்பான விசாரணைகள் காரணமாக முதல்வர் பதவியில் நீடிப்பதற்கான தகுதியை இழக்கிறார் என்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், மனுவை விசாரித்த நீதிபதிகள், “அவ்வாறு கோருவதற்கு சட்டபூர்வ உரிமை இல்லை” எனக் கூறி, அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிரான மனுவை தள்ளுபடி செய்தனர். ஆனபோதும், அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பல்வேறு வழக்குகளின் வரிசையில், முக்கியமான இன்னொரு வழக்கு நீதிமன்றத்தில் இன்றைய தினம் விசாரணைக்கு வருகிறது. இடைக்கால ஜாமீனில் வெளியே வந்திருக்கும் கேஜ்ரிவாலுக்கு எதிரான முக்கிய சட்டச்சிக்கலை இது எழுப்ப உள்ளது.

இது பாஜக எதிர்ப்பு யூடியூபரான துருவ் ரதி என்பவரின் ஆட்சேபகரமான வீடியோ ஒன்றை அர்விந்த் கேஜ்ரிவால் ரீட்வீட் செய்ததற்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்காகும். நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த வழக்கை விசாரிக்கிறது.

துருவ் ரதி
துருவ் ரதி

யூடியூபர் துருவ் ரதி மே 2018 இல் 'பாஜக ஐடி செல் பகுதி 2' என்ற தலைப்பில், பாஜக எதிர்ப்பு மற்றும் அவதூறு அடிப்படையிலான வீடியோவை வெளியிட்டார். அர்விந்த் கேஜ்ரிவால் அதை ரீட்வீட் செய்ததில், பாஜக ஐடி விங் பொங்கி எழுந்தது. நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் மீது வழக்கும் தொடரப்பட்டது.

பிப்ரவரி 26, 2024 அன்று, துருவ் ரதியின் வீடியோவை ரீட்வீட் செய்ததன் மூலம் தான் தவறு செய்ததாக கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு ஒரே நாளில் அர்விந்த் கேஜ்ரிவாலின் முதல்வர் பதவி தப்பித்தாலும், அவர் அடுத்த சட்ட சிக்கலுக்கு ஆளாகி உள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in