செந்தில் பாலாஜி வழக்கு... அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

செந்தில்பாலாஜி
செந்தில்பாலாஜி
Updated on
1 min read

அமைச்சர் செந்தில் பாலாஜியின்  மேல்முறையீட்டு மனுவுக்கு  பதிலளிக்குமாறு  அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கடந்த ஆண்டு ஜூன் 14-ம் தேதி  முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத் துறையினரால்  கைதுசெய்யப்பட்டார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமலாக்கத் துறையினர்  3,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். 

இந்த நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி  சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். செந்தில் பாலாஜியின் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், வழக்கை மூன்று மாதங்களுக்குள்  விசாரித்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தன் மீதான வழக்கை மூன்று மாதத்தில் விசாரித்து முடிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை எதிர்த்து செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திதார். அந்த மனு மீது பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. அதேசமயம்,  கீழமை நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்கவும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இதையும் வாசிக்கலாமே...    

வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்தது... மாதத்தின் முதல் நாளில் மகிழ்ச்சி!

வருமான வரி செலுத்துவோர் கவனத்திற்கு... புதிய நிதி ஆண்டு இன்று தொடக்கம்!

தமிழக பாஜக அலுவலகம் குற்றவாளிகளின் சரணாலயம்... அமைச்சர் மனோ தங்கராஜ் தாக்குதல்!

பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம்... ஏப்ரல் 9-ம் தேதி சென்னை வருகிறார்!

ஒரே நேரத்தில் ஏவப்பட்ட 23 செயற்கைக்கோள்கள்... ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சாதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in