நோட்டாவில் அதிகம் பேர் வாக்களித்தால் என்ன செய்வது? - தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

உச்ச நீதிமன்றம் நோட்டா
உச்ச நீதிமன்றம் நோட்டா

அதிகபட்ச வாக்காளர்கள் நோட்டா என்ற விருப்பத்தைத் தேர்வுசெய்தால், தேர்தல் செல்லாது என்று அறிவிக்கக் கோரிய மனு தொடர்பாக, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு, நோட்டா தொடர்பான விதிகளை ஆய்வு செய்யுமாறு தேர்தல் ஆணையத்திடம் கேட்டுக் கொண்டுள்ளது.

ஒரு குறிப்பிட்ட தொகுதியில் எந்தவொரு வேட்பாளர்களைக் காட்டிலும் நோட்டாவுக்கு அதிக வாக்குகள் விழுந்தால் அந்தத் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் எழுத்தாளரும், பேச்சாளருமான ஷிவ் கேரா பொதுநல வழக்கைத் தாக்கல் செய்திருந்தார்.

மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா
மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் நோட்டா

நோட்டா அதிக வாக்குகளைப் பெற்றால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர், நோட்டாவை விடக் குறைவான வாக்குகளைப் பெறும் வேட்பாளர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் நோட்டாவை தேர்தலில் போட்டியிடும் ஒரு கற்பனை வேட்பாளரைப் போல விளம்பரம் செய்ய வேண்டும் என்றும் அதற்கான விதிகளை உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், சூரத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதால், அங்கே பாஜக வேட்பாளர் மட்டுமே இருந்ததால் அங்கே தேர்தல் நடத்தப்படாத சமீபத்திய உதாரணத்தை மேற்கோள் காட்டினார்.

உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

வேறு வேட்பாளர்கள் களத்தில் இல்லாததால், பொதுமக்கள் அனைவரும் அந்த ஒரு வேட்பாளரையே தேர்வு செய்வார்கள் என்று கருதி பாஜக வென்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இப்படி நடக்கக்கூடாது. ஒரே ஒரு வேட்பாளர் இருந்தாலும், வாக்காளருக்கு விருப்பத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். நோட்டாவிற்கும் களத்தில் இருக்கும் வேட்பாளருக்கும் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் வாதங்களை முன்வைத்தார்.

நோட்டா விருப்பம் 2004 ஆம் ஆண்டுக்கு முந்தைய பொதுநல வழக்கின் உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றி 2013 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர், வேட்பாளர்கள் மீது அதிருப்தியை வெளிப்படுத்தவும், தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யவும் வாக்காளர்களுக்கு நோட்டா ஒரு விருப்பமாக செயல்பட்டது. நோட்டா வாக்குகள் "செல்லாதவை" என வகைப்படுத்தப்பட்டுள்ளன. நோட்டாவுக்கு 99.99% வாக்குகள் விழுந்து, ஒரே ஒரு வாக்கு எதாவது வேட்பாளருக்கு விழுந்தாலும் அந்த வேட்பாளர் தான் வென்றவராக அறிவிக்கப்படுவார். இதுவே இப்போது இருக்கும் விதி. நோட்டா தேர்தல் முடிவுகளில் நேரடியாகப் பங்களிக்காது. அவை தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக குறியீடாக பயன்படுத்தப்படுகின்றன.

இதையும் வாசிக்கலாமே...

வாக்குச்சீட்டில் முத்தமிட்ட பெண்கள்... லிப்ஸ்டிக் கறையால் செல்லாமல் போன 9,000 வாக்குகள்!

தயாரிப்பாளர் சங்கத்துக்கு அவமானம்... சும்மா விட மாட்டேன்... நடிகர் விஷால் ஆவேசம்!

தேர்தல் பணத்தில் ரூ.40 லட்சம் சுருட்டிய பாஜக நிர்வாகிகள்... சொந்தக் கட்சியினரே போஸ்டர் அடித்து கண்டனம்!

இரக்கமற்ற மகன்... சொத்துக்காக தந்தையை கொடூரமாக தாக்கிய அவலம்! - பதற வைக்கும் வீடியோ

உச்சக்கட்ட கவர்ச்சியில் நயன்தாரா... தெறிக்கும் பாலிவுட்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in