சோனியா உள்ளிட்ட 14 பேர்... மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு!

சோனியா உள்ளிட்ட 14 பேர்... மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்பு!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட 14 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக இன்று பதவியேற்றனர்.

புதிதாக பதவியேற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள்...
புதிதாக பதவியேற்ற மாநிலங்களவை உறுப்பினர்கள்...

அஸ்வினி வைஷ்ணவ், எல்.முருகன் உள்ளிட்ட ஏழு  மத்திய அமைச்சர்கள் உள்பட மாநிலங்களவை எம்பி-க்கள் 49 பேரின் பதவிக்காலம்  ஏப்ரல் 2-ல் நிறைவடைந்தது.   முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட 5 எம்பி-க்களின் பதவிக்காலம் ஏப்ரல் 3 ல் முடிவடைந்தது. இதையடுத்து  அந்த இடங்களுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்ட 13 பேர் நேற்று எம்பி-க்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அதைத்தொடர்ந்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி , மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்ட  14 பேர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றுக் கொண்டனர். குடியரசு துணைத் தலைவரும், மாநிலங்களவை தலைவருமான ஜக்தீப் தன்கர், புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் 14 பேருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 

பதவியேற்கும் முன்பாக சோனியாவுக்கு கார்கே வாழ்த்து...
பதவியேற்கும் முன்பாக சோனியாவுக்கு கார்கே வாழ்த்து...

சோனியா காந்தி ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்தும், ஒடிசாவில் இருந்து அஸ்வினி வைஷ்ணவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கர்நாடக காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கன், உத்தரப் பிரதேச பாஜக தலைவர் ஆர்.பி.என்.சிங், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக பிரமுகர் சாமிக் பட்டாச்சார்யா ஆகியோரும் மாநிலங்களவை உறுப்பினராக இன்று பதவியேற்றனர்.

2019-ல் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டபோது...
2019-ல் மன்மோகன் சிங் மாநிலங்களவை உறுப்பினராக பொறுப்பேற்றுக் கொண்டபோது...

மாநிலங்களவை உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட அனைவரும் மாநிலங்களவை தலைவருடன் குழுவாக புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.  இதுவரை மக்களவை உறுப்பினராக இருந்து வந்த சோனியா காந்தி, முதல் முறையாக மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்றுள்ளார். காங்கிரஸ் தலைவரும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே முன்னிலையில் சோனியா பதவியேற்றார். அப்போது  பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

இதையும் வாசிக்கலாமே...  

குட்நியூஸ்... இந்திய கடற்படையில் 4,108 வேலைவாய்ப்புகள்: ஏப்ரல் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!

அதிர்ச்சி: ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 2 வயது குழந்தை; மீட்பு பணி தீவிரம்!

சிறுத்தை நடமாட்டத்தால் மக்கள் அச்சம்... மயிலாடுதுறையில் 7 பள்ளிகளுக்கு விடுமுறை!

வங்கிக் கணக்கை முடக்குவதாக பாஜக மிரட்டியது... பிரேமலதா பகீர் குற்றச்சாட்டு!

தம்பி அண்ணாமலை, மோதிப் பார்ப்போமா?... சவால் விட்ட சீமான்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in