கேரளாவில் கிறிஸ்துவர்களின் வீடுகள், சர்ச்சுகளுக்கு சினேக யாத்திரை - பாஜகவின் பலே வியூகம்!

கேரளாவில் கிறிஸ்துவர்களின் வீடுகள், சர்ச்சுகளுக்கு சினேக யாத்திரை - பாஜகவின் பலே வியூகம்!

கேரளாவில் பாஜக சார்பில் கிறிஸ்தவர்களின் வீடுகள் மற்றும் சர்ச்சுகளுக்கு சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து செல்லும் `சினேக யாத்திரை' என்ற நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. பாஜகவினர் பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளை கிறிஸ்தவர்களின் அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்கின்றனர்.

கேரள மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் சீரோ மலபார் சபையின் செயின்ட் தாமஸ் மவுன்ட்டிலிருந்து இந்த யாத்திரையை தொடங்கிவைத்தார். இதனைத் தொடர்ந்து பாஜகவின் அனைத்து மாநில, மாவட்ட நிர்வாகிகளும் கிறிஸ்தவ மத தலைவர்கள் உள்ளிட்டவர்களின் வீடுகளுக்குச் சென்று கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்க உள்ளனர். இது குறித்து பேசிய பாஜகவினர், பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டு மாநிலம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்களை வீடுகளுக்கும், தேவாலயங்களுக்கும் சென்று சந்திக்கும் சினேக யாத்திரை என்ற மிகப்பெரிய பிரச்சாரம் தொடங்கியுள்ளது என்று தெரிவித்தனர். மேலும், பிரதமரின் கிறிஸ்துமஸ் வாழ்த்து அட்டைகளைக் இவர்கள் அனைத்து வீடுகளுக்கும் கொண்டு செல்கின்றனர்.

இதுகுறித்து பேசிய பாஜக மாநிலத் தலைவர் கே.சுரேந்திரன், “காங்கிரஸ், சி.பி.எம் கட்சியினர் சொல்வதுபோல நாங்கள் இதில் எந்த அரசியலும் பார்க்கவில்லை. தேர்தலுக்காக இந்த யாத்திரையை நடத்தவில்லை. கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை அனைத்து வீடுகளுக்கும் சொல்வது மட்டும்தான், இந்த சினேக யாத்திரையின் லட்சியம். சமுதாய சமத்துவம், சமுதாய ஒற்றுமை ஆகியவற்றை உறுதிப்படுத்தும் விதமாக இந்த யாத்திரை மேற்கொள்கிறோம். கடந்த ஆண்டும் சினேக யாத்திரை நடத்தினோம். ஆனால் எல்லா வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்ல முடியவில்லை. இந்த முறை அனைத்து வீடுகளுக்கும் சென்று வாழ்த்து சொல்லவிருக்கிறோம். 21-ம் தேதி முதல் வரும் 31-ம் தேதி வரை 10 நாள்கள் தொடர்ச்சியாக கிறிஸ்தவர்களின் வீடுகளுக்கு சென்று வாழ்த்துகள் சொல்ல உள்ளோம்.

கிறிஸ்தவ சமூகத்தை, பொய் பிரச்சாரம் மூலம் திசை திருப்ப முடியாது. 99 சதவிகித கிறிஸ்தவ மக்கள் உள்ள மிசோராமில் எங்களுக்கு இரண்டு மடங்கு சீட்டுகள் கிடைத்தன. ஓட்டும் இரட்டிப்பாகி உள்ளது. பாஜக குறித்து காங்கிரஸும், சிபிஎம் கட்சியும் தவறான பிரசாரம் செய்து வருகின்றன. அவர்களின் பிரசாரங்களை முடிவுக்கு கொண்டு வரவும் இந்த சினேக யாத்திரை பயனுள்ளதாக இருக்கும். காங்கிரஸைவிட சிறுபான்மையினருக்கு, அதிலும் குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் கட்சியாக பாஜக உள்ளது" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


இயல்பு நிலை திரும்புகிறது... தூத்துக்குடியில் ரயில்கள் இயக்கம்... நெல்லையில் பள்ளிகள் திறப்பு!

முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் அப்போலோ மருத்துவமனையில் அனுமதி!

எரிவாயு சிலிண்டர் விலை ரூ.39 குறைந்தது... வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் வெட்டிக்கொலை!

ராகுல்காந்தி மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in