'அகண்ட பாரதம்' என்பது நமது சித்தாந்தம்... பிரபல பாடகரின் பேச்சால் சர்ச்சை!

பாடகர் சங்கர் மகாதேவன்
பாடகர் சங்கர் மகாதேவன்

‘அகண்ட பாரதம்’ என்ற நமது சித்தாந்தம், நமது மரபுகள், நமது கலாச்சாரம் ஆகியவற்றைப் பாதுகாப்பதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்கு அதிகம் என்று பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மோகன் பகவத், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர்.
மோகன் பகவத், சங்கர் மகாதேவன் உள்ளிட்டோர்.

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் உள்ள ரெஷிம்பாக் பகுதியில் ஆர்எஸ்எஸ்சின் 98வது நிறுவன நாள் விழா இன்று நடைபெற்றது. இதில் பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட இந்தியாவின் பல்வேறு மொழி திரைப்பட பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன் பத்மஸ்ரீ விருது பெற்றவர்.

ஆர்எஸ்எஸ் நிறுவன நாள் விழாவில் அவர் கலந்து கொண்டதுடன், ஆர்எஸ்எஸ் நிறுவனர் கே.பி.ஹெட்கேவாரின் நினைவிடத்தையும் பார்வையிட்டார். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

ஹெட்கேவாரின் நினைவிடத்தில் சங்கர் மகாதேவன் அஞ்சலி
ஹெட்கேவாரின் நினைவிடத்தில் சங்கர் மகாதேவன் அஞ்சலி

இதன் பின் பாடகர் சங்கர் மகாதேவன் பேசுகையில், "இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்களைப் பாதுகாப்பதற்காகவும், அகண்ட பாரதத்தின் சித்தாந்தத்தைப் பாதுகாப்பதற்காகவும் ஆர்எஸ்எஸ் செயல்படுகிறது. ஆர்எஸ்எஸ். அமைப்பு நாட்டிற்காக செய்து வரும் பங்களிப்பை பாராட்டுகிறேன். இது பற்றி என்ன சொல்ல முடியும்? நான் உங்களுக்கு வணக்கம் செலுத்துகிறேன்.

'அகண்ட பாரதம்' என்ற நமது சித்தாந்தத்தை, நமது பாரம்பரியத்தை, நமது கலாச்சாரத்தைப் பாதுகாப்பதில் வேறு எவரையும் விட ஆர்எஸ்எஸ்சின் பங்களிப்பு அதிகம்.

எந்தவொரு இசைக்குறிப்பும் (துண்) சர்கம் (இசைக்குறிப்புகள்) கொண்டது, கணினிகளுக்கு பின்னால் இருநிலைக் குறியீடுகள் இருப்பது போல், நமது நாடு ஒரு பாடலைப் போன்றது என்றால், ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் சவால்களைக் கவனிக்கும், பின்னால் உள்ள இசைக் குறிப்புகளைப் போன்றவர்கள்" என்றார்.

'அகண்ட பாரதம்' என்ற ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கையை மதச்சார்பற்ற அமைப்புகள், காங்கிரஸ், இடதுசாரிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றனர். இந்த நிலையில், 'அகண்ட பாரதம்' நமது சித்தாந்தம் என பிரபல பாடகர் சங்கர் மகாதேவன் பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in