பிரியாணி பிளேட்டில் எப்படி ராமர் படம் இருக்கலாம்... கடையை முற்றுகையிட்ட இந்து அமைப்பினர்!

பிரியாணி வழங்கும் பிளேட்டில் ராமர் படம்
பிரியாணி வழங்கும் பிளேட்டில் ராமர் படம்

டெல்லியில் உள்ள ஹோட்டலில் ராமர் படம் போட்ட பேப்பர் பிளேட்டில் பிரியாணி விற்பனை செய்ததால், இந்து அமைப்பினர் அந்த கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமர்
ராமர்

வடமாநிலங்களில் ராமரை கடவுளாக இந்துக்கள் வழிபட்டு வருகின்றனர். கடந்த ஜனவரி மாதத்தில் கூட அயோத்தியில் ராமர் கோயில் புதியதாக கட்டி, அதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். தற்போது நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர், ராமர் கோயிலுக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில், டெல்லி ஜஹாங்கிர்புரி பகுதியில் ராமரின் படம் இருக்கும் பேப்பர் பிளேட்டில் பிரியாணி பரிமாறியதாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது. இது ராமர் பக்தர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அந்த கடை இருக்கும் பகுதியில் உள்ளூர் மக்களும், பஜ்ரங்தள் உறுப்பினர்களும் திரண்டனர். கடை உரிமையாளரிடம், பேப்பர் தட்டுகளில் ராமர் படம் இருந்தது குறித்து கேள்விகளை எழுப்பினர்.

ராமர் படம் இருக்கும் பேப்பர் பிளேட்டில் சிக்கன் பிரியாணி வழங்கக்கூடாது என்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. மேலும், இதுகுறித்து காவல்நிலையத்தில் கடை உரிமையாளர் மீது புகார் அளித்தனர்.

இதையடுத்து அப்பகுதிக்கு போலீஸார் விரைந்து வந்தனர். இதுகுறித்து கடை உரிமையாளர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கடை உரிமையாளரை கைது செய்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். மத உணர்வுகளை புண்படுத்தும் நோக்கத்தில் வேண்டுமென்றே இதை செய்தார்களா அல்லது வியாபார நோக்கத்திற்கா செய்தார்களா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

அரசு ஊழியர்களுக்கு குட்நியூஸ்... அகவிலைப்படி 25% அதிரடியாக உயர்வு!

இந்து கோயில் கட்டியதால் தான் துபாய் வெள்ளத்தில் மிதக்கிறது... பாகிஸ்தானியர் சர்ச்சை பேச்சு!

கள்ளத்துப்பாக்கி... ரத்தம் படிந்த கோடாரி... கோடநாடு வழக்கில் அதிமுக பிரமுகருக்கு சிக்கல்!

கும்பகோணத்தில் பரபரப்பு... 10 அடி பள்ளத்தில் சிக்கிய தேர் சக்கரம்... மீட்பு பணிகள் தீவிரம்!

ஷாக்... ஆணவப் படுகொலை செய்யப்பட்ட இளைஞரின் மனைவி தற்கொலை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in