வாக்காளர்களை லத்தியால் அடித்து வெளியேற்றிய போலீஸ்... உ.பியில் அதிர்ச்சி; வைரல் வீடியோ!

வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்காளர்களை லத்தியால் அடித்து வெளியேற்றும் போலீஸார்
வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வாக்காளர்களை லத்தியால் அடித்து வெளியேற்றும் போலீஸார்

உத்தரப் பிரதேசத்தில் வாக்களிக்க வந்த வாக்காளர்களை போலீஸார் லத்தியால் அடித்து வெளியேற்றும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19ம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இன்று நாடு முழுவதும் உள்ள 94 மக்களவை தொகுதிகளில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. உத்தரப் பிரதேசத்தில் 3வது கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், இன்று சம்பல், ஹத்ராஸ், ஆக்ரா, ஃபதேபூர் சிக்ரி, ஃபெரோஷாபாத், மெயின்புரி, ஈட்டா, படான், பரேலி, ஆன்லா ஆகிய 10 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 10 தொகுதிகளில் கணிசமான அளவு இஸ்லாமிய வாக்காளர்கள் உள்ளனர். இந்த நிலையில் சம்பல் தொகுதியில் இன்று ஏராளமான வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக கூடியிருந்தனர். அஸ்மாலி கிராமத்தில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் பூத் நம்பர்கள் 181, 182, 183, 184 ஆகிய பகுதிகளுக்கான வாக்குச்சாவடி மையம் அமைக்கப்பட்டு இருந்தது.

இன்று காலை முதலே ஏராளமான இஸ்லாமிய வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வந்தனர். இந்த நிலையில் மதியம் அங்கு வந்த 20-க்கும் மேற்பட்ட போலீஸார் வாக்களிப்பதற்காக, வாக்குச்சாவடி மையத்தில் காத்திருந்த மக்களை அங்கிருந்து லத்தியால் அடித்து வெளியேற்றியதாக கூறப்படுகிறது.

போலீஸாருடன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஜியா உர் ரஹ்மான் வாக்குவாதம், தள்ளுமுள்ளு
போலீஸாருடன் சமாஜ்வாடி கட்சி வேட்பாளர் ஜியா உர் ரஹ்மான் வாக்குவாதம், தள்ளுமுள்ளு

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியான நிலையில், சம்பவ இடத்திற்கு சமாஜ்வாதி கட்சியின் வேட்பாளர் ஜியா உர் ரஹ்மான் பர்க் விரைந்து சென்றார். அப்போது போலீஸார் வாக்குப்பதிவை சீர்குலைக்கும் வகையில் நடந்து கொள்வதாக கூறி அவர், போலீஸாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மேலும் தேர்தல் ஆணையம் எவ்விதமான நடவடிக்கையும் இந்த விவகாரத்தில் எடுக்கவில்லை எனவும் கூறி அவர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது சமாஜ்வாதி கட்சியினருக்கும் போலீஸாருக்கும் இடையே கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

வாக்காளர்களை, குறிப்பாக இஸ்லாமியர்களை வாக்களிக்க விடாமல் போலீஸார் தடுத்து வருவதாக உத்தரபிரதேசத்தில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

குழந்தையை தூக்கிப் போட்டுப் பிடித்து கொஞ்சி மகிழ்ந்த பிரதமர் மோடி... தீயாய் பரவும் வீடியோ!

சுங்கக் கட்டணம் செலுத்தாமல் சென்ற கார்... தடுத்த ஊழியர் மீது காரை ஏற்றியதால் பரபரப்பு!

இளையராஜா இசை தயாரிப்பாளருக்குத்தான் முழு சொந்தம்... தமிழ்பட இசையமைப்பாளர் பேட்டி!

பெண் ஓட்டிச் சென்ற காரை துரத்திச் சென்று பீர் பாட்டில்களால் தாக்குதல்... வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

அதிர்ச்சி... வெயிலில் சுருண்டு விழுந்து தேர்தல் அதிகாரி உயிரிழப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in