கண்டுகொள்ளாத காங்கிரஸ்... விரக்தியில் ஷர்மிளா; தெலங்கானாவில் 5 முனைப் போட்டி!

ஷர்மிளா
ஷர்மிளா

தெலங்கானாவில் இப்போது காற்று காங்கிரஸின் பக்கம் வீசுவதை உணர்ந்த ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா, தனது கட்சியை ஒட்டு மொத்தமாக கலைத்து காங்கிரசில் இணைக்க தீவிரம் காட்டி வந்தார். ஆனால் இவரை இணைக்க காங்கிரஸ் விரும்பாததால், தனித்துப் போட்டியிட தயாராகி வருகிறார்.

ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனின் தங்கை ஷர்மிளா. இவர் மறைந்த தனது தந்தையும், ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச முன்னாள் முதல்வருமான ஒய்எஸ் ராஜசேகர ரெட்டியை போன்று அரசியலில் பெயர் எடுக்கவேண்டும் என விரும்பினார்.

இதற்காக ஆந்திராவில் தனது அண்ணன் நடத்திவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் போன்று தெலங்கானாவில் கால் பதிக்க விரும்பி கடந்த 2021ம் ஆண்டு ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தெலங்கானா என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். தெலங்கானாவில் தற்போதைய ஆளும் சந்திரசேகரராவ் தலைமையிலான பிஆர்எஸ் கட்சிக்கு மாற்றாக ஷர்மிளா தன்னை பிரகடனப்படுத்தி தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

ஜெகன் மோகன் ரெட்டி ஷர்மிளா
ஜெகன் மோகன் ரெட்டி ஷர்மிளா

சில மாதங்களுக்கு முன்பு வரை நடைபயணம் உள்ளிட்டவை மேற்கொண்டு பரபரப்பாக இருந்தார். இதனிடையே தெலங்கானாவில் இப்போது காற்று காங்கிரஸின் பக்கம் வீசுவதை உணர்ந்த ஷர்மிளா, கட்சியை கலைத்து ஒட்டு மொத்தமாக காங்கிரசில் இணைக்க தீவிரம் காட்டி வந்தார். 2 முறை டெல்லிக்கு சென்ற ஷர்மிளா, அங்கு காங்கிரஸ் தலைவர் சோனியாகாத்தி மற்றும் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார். அப்போது சில நிபந்தனைகளை ஷர்மிளா முன்வைத்ததாக தெரிகிறது. இதனால் ஷர்மிளாவை காங்கிரசில் இணைக்காமல் கட்சியின் மேலிடம் தொடர்ந்து மவுனம் காட்டி வருகிறது.

இதனால் விரக்தியடைந்த ஷர்மிளா தனித்து போட்டியிட திட்டமிட்டுள்ளார். இந்நிலையில், தெலங்கானா சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு ஆளும் பிஆர்எஸ் கட்சி, காங்கிரஸ், ஓவைசி தலைமையிலான எம்ஐஎம் கட்சி மற்றும் பாஜக ஆகியவை பிரதான கட்சிகளாக உள்ளன. இந்நிலையில் 5வதாக தற்போது ஷர்மிளாவின் கட்சியும் தேர்தல் களம் காண உள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in