காங்கிரஸுக்கு செக் வைத்த இந்தூர் வேட்பாளர்: பாஜகவுக்கு தாவியதோடு, வேட்புமனுவையும் திரும்பப் பெற்றார்

இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் பாம் பாஜவில் இணைந்தார்
இந்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் அக்சய் பாம் பாஜவில் இணைந்தார்

காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் நெருக்கத்தில் பெரும் பின்னடைவாக, அக்கட்சியின் இந்தூர் மக்களவைத் தொகுதி வேட்பாளர் அக்சய் காந்தி பாம், பாஜகவுக்கு தாவியதோடு வேட்பு மனுவையும் திரும்பப் பெற்றார்.

மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் அக்சய் பாம். இத்தொகுதியின் தற்போதைய பாஜக எம்பி- ஷங்கர் லால்வானிக்கு எதிராக காங்கிரஸ் கட்சி அக்சய் பாம்-ஐ களமிறக்கி இருந்தது. இவர் ஏற்கெனவே வேட்பு மனுவும் தாக்கல் செய்திருந்தார். இந்தூர் தொகுதி வரும் மே 13ம் தேதி நடைபெறும் 4ம் கட்டத் தேர்தலில் வாக்குப்பதிவை எதிர்கொள்கிறது.

காங்கிரஸ் துண்டுடன் அக்சய் பாம்
காங்கிரஸ் துண்டுடன் அக்சய் பாம்

தேர்தலுக்கு இன்னும் சுமார் 2 வாரங்களே உள்ள நிலையில், அக்சய் பாம் திடீரென பாஜகவில் சேர்ந்துள்ளார். மேலும், அவர் இன்று அக்கட்சி எம்எல்ஏ- ரமேஷ் மெண்டோலாவுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு சென்று, தனது வேட்பு மனுவையும் திரும்பப் பெற்றார்.

அம்மாநில மூத்த பாஜக தலைவரும், அமைச்சருமான கைலாஷ் விஜயவர்கியா, அக்சய் பாம்-ஐ பாஜகவுக்கு வரவேற்று எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “பிரதமர் நரேந்திர மோடி, கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, முதல்வர் மோகன் யாதவ், மாநிலத் தலைவர் வி.டி.சர்மா ஆகியோர் தலைமையில், இந்தூர் மக்களவை காங்கிரஸ் வேட்பாளர் அக்‌ஷய் பாம் ஐ பாஜக வரவேற்கிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

குஜராத் மாநிலம் சூரத் மக்களவைத் தொகுதியில் கடந்த 22ம் தேதி அன்று, வேட்பு மனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளஇல், காங்கிரஸ் வேட்பாளர் நிலேஷ் கும்பானி உள்ளிட்ட அனைத்து வேட்பாளர்களும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து,பாஜக வேட்பாளர் முகேஷ் தலால் போட்டியின்றி வெற்றி பெற்றார். தற்போது இந்தூரிலும் காங்கிரஸ் வேட்பாளர் வேட்புமனுவை திரும்பப் பெற்றதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

கடந்த 6 மாதங்களில் 31 சதவீத மசாலாக்கள் நிராகரிப்பு; இந்தியாவின் மசாலாக்களை ஆராயும் அமெரிக்கா!

நடிகர் பிரகாஷ்ராஜ்க்கு 'அம்பேத்கர் சுடர் விருது'... விடுதலை சிறுத்தைகள் கட்சி அறிவிப்பு!

பகீர்... ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணியைக் காப்பாற்றிய பெண் போலீஸ்: பதற வைக்கும் வீடியோ வைரல்!

உளவுத் துறை எச்சரிக்கை: நாடு முழுவதும் அமலாக்கத் துறை அலுவலகங்களுக்கும் சிஐஎஸ்எஃப் பாதுகாப்பு!

முதல் மதிப்பெண் எடுக்காமலேயே இருந்திருக்கலாம்... உருவ கேலிக்குள்ளான மாணவி வேதனை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in