ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக நாளை சட்டப்பேரவையில் தீர்மானம்... முதல்வர் ஸ்டாலினின் அதிரடி வியூகம்!

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

மத்திய பாஜக அரசு கொண்டுவர முயற்சிக்கும் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் நாளை தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் கொண்டு வரவுள்ளார்.

இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. தமிழக அரசு தயாரித்த உரையை வாசிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி புறக்கணித்த சம்பவம் அரசியல் அரங்கில் சலசலப்புகளை உருவாக்கியிருக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்
ஒரே நாடு ஒரே தேர்தல்

தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நாளை சட்டப்பேரவையில் முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, மத்திய அரசின் 'ஒரே நாடு ஒரே தேர்தல், திட்டத்தை எதிர்த்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது. இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கூடாது என வலியுறுத்தி சட்டப்பேரவையில் நாளை தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் முன்மொழியவுள்ளார்.

2014ம் ஆண்டு பாஜக ஆட்சி அமைந்து நரேந்திர மோடி பிரதமரானது முதல் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை மோடி வலியுறுத்தி வருகிறார். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவும் அமைக்கப்படுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் முறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம்

நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவையில் மற்றொரு தீர்மானமாக 2026ம் ஆண்டுக்கு பிறகு, மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் எனவும் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிகிறது.

இதையும் வாசிக்கலாமே...

6 மாதங்களுக்கான உணவுப்பொருள், டீசல் உடன் குவியும் விவசாயிகள்; தேர்தல் நெருக்கத்தில் கோரிக்கைகள் ஈடேறுமா?

சாந்தனை இலங்கைக்கு அனுப்ப ஒரு வாரத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும்... உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி!

சர்வாதிகார மோடி அரசு விவசாயிகளின் குரல்களை நசுக்க முயற்சிக்கிறது: கார்கே விளாசல்!

வெற்றி துரைசாமியின் இறுதிச்சடங்கு... நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் அஜித்!

பிரசவம் நடந்த 2வது நாளில் தேர்வு... 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in