பலாப்பழத்தை தேடி ஈக்கள் தான் வரும்; அதிமுக தொண்டன் வர மாட்டான்... ஓபிஎஸ்ஸை வெளுத்து வாங்கிய செல்லூர் ராஜூ!

செல்லூர் ராஜூ
செல்லூர் ராஜூ

"பலாப்பழத்தை தேடி ஈக்கள் வேண்டுமானால் வரும். அதிமுக தொண்டன் வரமாட்டான்" என்று ஓபிஎஸ்ஸுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. காலை முதலே அரசியல் கட்சி தலைவர்களும் முக்கிய பிரபலங்களும் வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள். மதுரை கோரிப்பாளையம், அரசு மீனாட்சி கலைக் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தனது குடும்பத்தினரோடு வாக்களிக்க வந்தார். மக்களுடன் மக்களாக நீண்ட வரிசையில் நின்று அவர் தனது வாக்கை செலுத்தினார்.

மக்களுடன் வரிசையில் நின்ற செல்லூர் ராஜூ
மக்களுடன் வரிசையில் நின்ற செல்லூர் ராஜூHR Ferncrystal

வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தேர்தலுக்கு பின்னர் அதிமுக தங்களிடம் வந்து விடும் என ஓபிஎஸ் பேசியிருக்கிறார். இது ஆண்டவனுக்குதான் வெளிச்சம். பலாப்பழத்ந்த் தேடி ஈக்கள் வேண்டுமானால் வரும். ஒரு அதிமுக தொண்டன் கூட வரமாட்டான்.

தமிழ்நாடு என்பது திராவிட பூமி. இங்கு திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணிக்கு இடையே மட்டுமே போட்டி நிலவுகிறது. இதில், தமிழக மக்கள் அதிமுக கூட்டணிக்குத்தான் ஆதரவு அளிப்பார்கள். தமிழர்களின் உரிமைகளை மீட்பதும், பலத்தை காப்பாற்றுவதும் தான் அதிமுகவின் கொள்கை. அதனால், அதிமுக கூட்டணியை மக்கள் வெற்றிபெற வைப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

வாக்களித்துவிட்டு விரலை உயர்த்தி காட்டிய செல்லூர் ராஜூ
வாக்களித்துவிட்டு விரலை உயர்த்தி காட்டிய செல்லூர் ராஜூ HR Ferncrystal

இந்தியா கூட்டணியில் யார் பிரதம வேட்பாளர் எனக் கூறவில்லை. பாஜக கூட்டணியில் மோடிதான் பிரதமர் வேட்பாளர் என்கிறார்கள். மோடிக்கு மேலே ஒரு தலைமை உள்ளது. அவர்கள் மோடிதான் பிரதமர் என்று இதுவரையில் கூறவில்லை. ஏனெனில், பாஜக விதிகளின்படி இரண்டு முறைக்கு மேல் ஒருவர் பிரதமராக பதவி வைக்க முடியாது என்பார்கள்.

அதனால், பாஜக கூட்டணியிலும் தேர்தலுக்குப் பின்னரே யார் பிரதமர் என தெரியவரும். மக்கள் தான் எஜமானர்கள் மக்கள் முடிவு செய்பவர்கள் தான் பிரதமராக வர முடியும். மத்தியில் யார் பிரதமராக வந்தாலும், தமிழகத்திற்கு யார் நன்மை செய்வார்கள் என பார்த்து அவர்களுக்கு தான் அதிமுக ஆதரவு தரும்" என்றார்.

இதையும் வாசிக்கலாமே...


வரிசையில் காத்திருந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது வாக்கினை செலுத்தினார்!

வாக்களிப்பது தான் மரியாதை...நடிகர் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி!

வாக்குப்பதிவு இயந்திரத்தில் கோளாறு... தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு தாமதம்!

பணம் கொடுத்ததாக நிரூபித்தால் அரசியலை விட்டே விலகுகிறேன்... அண்ணாமலை சவால்!

ஆம்புலன்ஸில் வந்து வாக்களித்த மூத்த வாக்காளர்... சிறப்பு ஏற்பாடுகள் செய்துள்ள தேர்தல் ஆணையம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in