தென்மாவட்டங்களில் ஆசிரியர் தேர்வை ஒத்திவைக்க வேண்டும்; தமிழ்நாடு அரசுக்கு சீமான் கோரிக்கை!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Updated on
2 min read

தென் மாவட்டங்களில் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்தி வைத்து உடனடியாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் உள்ளிட்ட வட மாவட்டங்களில் பெருவெள்ள பாதிப்புகளை கருத்தில் கொண்டு எதிர்வரும் ஜனவரி மாதம் 7ம் நாள் நடைபெறவிருந்த பட்டதாரி ஆசிரியர் தேர்வானது பிப்ரவரி மாதம் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுவதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.”

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு கோரிக்கை

”அதேசமயம் வட மாவட்டங்களைப் போலவே கனமழை வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை ஒத்திவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் எவ்வித அறிவிப்பையும் இதுவரை வெளியிடாது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இத்தகைய பாகுபாட்டால் தென்மாவட்டங்களைச் சேர்ந்த தேர்வர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.”

தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் தேர்வுகளை ஒத்திவைக்க கோரிக்கை
தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் தேர்வுகளை ஒத்திவைக்க கோரிக்கை

”எனவே தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் கனமழையால் பாதிக்கப்பட்ட வட மாவட்டங்களுக்கு அறிவிக்கப்பட்டது போலவே, தென்மாவட்டங்களிலும் ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய ஆசிரியர் தேர்வினை பிப்ரவரி மாதத்திற்கு ஒத்திவைத்து உடனடியாக அறிவிப்பு வெளியிட உத்தரவிட்டு, தேர்வர்களின் நலன் காக்க வேண்டுமென நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசனை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதையும் வாசிக்கலாமே...


2024-ல் தேர்தலைச் சந்திக்கும் 40 நாடுகள்... இந்தியாவுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியம்?

புத்தாண்டு பரிசு... வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.சி-58 ராக்கெட்!

ஆபாசமாக உடை அணிந்த மனைவி; கழுத்தை அறுத்துக் கொன்ற கணவன்: திருமணமான 6 மாதத்தில் பயங்கரம்!

அதிர்ச்சி... மாணவியைக் கடத்தி கூட்டுப் பலாத்காரம்: வீடியோ எடுத்து ரசித்த பாஜக நிர்வாகிகள் கைது!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in