நான் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவை வளரவிட மாட்டேன்... சீமான் சீற்றம்!

சீமான்
சீமான்

நான் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவை வளரவிட மாட்டேன் என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் திமுக இதுபோல சொல்லுமா என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஈரோடு மக்களவைத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மு. கார்மேகனை ஆதரித்து சீமான் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், '' பாஜக தமிழ்நாட்டில் வளர்வதற்கு திமுகதான் காரணம். தமிழகத்தில் பாஜகவை வளர்த்துவிட்டதே திமுகதான். வாஜ்பாய் தலைமையிலான பாஜக ஆட்சியை தாங்கி பிடித்தது திமுகதான். திமுக -அதிமுக இடையே இப்போது போட்டியே யார் மோடியை பார்த்து பல்லை காட்டியது என்று சொல்லிதான் பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களிடம் பேச ஒன்றுமில்லை அதனால் செங்கல்லையும், போட்டோவையும் தூக்கிக்கொண்டு அலைகிறார்கள். 3 ஆண்டுகளில் செய்த சாதனைகள் என சொல்ல திமுகவுக்கும் ஒன்றும் இல்லை. 10 ஆண்டுகளில் செய்த சாதனைகள் என்று சொல்ல பாஜகவுக்கும் ஒன்றும் இல்லை. 10 ஆண்டுகளில் செய்யாத நல்லதையா பாஜக இனிமேல் செய்யப்போகிறது?

சீமான்
சீமான்

கச்சத்தீவு, காவிரியில் உரிமையை மீட்டுத்தராத காங்கிரஸ், பாஜகவுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். பாஜக மதவாத கட்சி என்றால், காங்கிரஸ் மிதவாத கட்சியா?. பாபர் மசூதியை இடித்தது பாஜக, அதனை இடிக்க அனுமதித்தது காங்கிரஸ். அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் நினைத்திருந்தால் வலிமை மிக்க ராணுவத்தால் பாபர் மசூதி இடிப்பை தடுத்து நிறுத்தியிருக்க முடியாதா?. வெளியுறவு கொள்கை, பாதுகாப்பு கொள்கை, பொருளாதார கொள்கை, கல்விக்கொள்கை என பாஜக, காங்கிரஸ் இரண்டு கட்சிக்கும் ஒரே கொள்கைதான். இவர்கள் இருவருக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

விவசாயத்தின் நிலையப் பற்றி எந்த அரசியல்வாதியும் பேசமாட்டார். பொருள்களை உற்பத்தி செய்பவன், அதன் விலையை தீர்மானிக்க முடிகிறது. ஆனால் விவசாயி தனது உற்பத்தி பொருளுக்கு விலையை நிர்ணயிக்க முடியவில்லை. இன்றும் டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்கிறேன் என்கிறது திமுக அரசு. விவசாயியை கடன் வாங்க வைத்தது யார்? கல்விக் கடனை ரத்து செய்வதாக உறுதி அளிக்கிறது. மாணவனை கடன் வாங்க வைத்தது யார்? இலவச கல்வியை ஏன் தரவில்லை.

பாஜக ஆளும் மாநிலங்களில் கூட பிரதமர் மோடி இத்தனை முறை சென்றதில்லை. எதிர்க்கட்சியாக இருக்கும்போது மோடிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதும், ஆளும் கட்சியாக இருக்கும்போது ஆதரவு தெரிவிப்பதும் திமுக பாணி. தமிழ்நாட்டிற்கு வந்தால், ரோடு ஷோ என்ற பெயரில் வாகன அணிவகுப்பை நடத்துகின்றனர். மக்களிடம் இறங்கிப் பேச அவர்களுக்கு தைரியம் உண்டா?

சீமான்
சீமான்

வெளியாட்கள் யார் வந்தாலும் தலைவர்களாக ஏற்றுக்கொள்ளும் தமிழர்கள், தமிழன் யாராவது தலைவனாக வந்தால் என்ன சாதி என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் வடமாநில மக்கள் பலர் வந்து தொழில் தொடங்குகிறார்கள். தமிழர்களில் எத்தனை பேர் சொந்த தொழில் செய்கின்றனர். சாதியின் பெயரால் ஏற்றத்தாழ்வு இன்னும் தொடர்கிறது. தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுக்காத கட்சிகளை புறக்கணிப்போம்.

நான் இருக்கும் வரை தமிழகத்தில் பாஜகவை வளரவிட மாட்டேன் என்று உறுதியாக சொல்ல முடியும். ஆனால் திமுக இதுபோல சொல்லுமா? சொல்லும் திராணி இருக்கிறதா?. இன்று கச்சத்தீவை மீட்போம் என சொல்லும் பிரதமர், தமிழர்கள் தாக்கப்பட்டபோது ஒருமுறையாவது கண்டித்தாரா?. வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களுக்கு எல்லாம் வராத பிரதமர் மோடி இப்போது ஏன் வருகிறார்?” என்று சீமான் பேசினார்

இதையும் வாசிக்கலாமே...   


சொந்தமாக கோயில் கட்டிய பிரபல நடிகர்கள்!

தாய் கண் முன் மகன் வெட்டிக் கொலை... திருவேற்காட்டில் பயங்கரம்!

தொட்ட இடமெல்லாம் கொட்டும் கோடிகள்... கோழித் தீவன நிறுவனத்தில் 3- வது நாளாக சோதனை!

உங்க அப்பாவி கணவரை ஏன் ஏமாற்றினீர்கள்... ரசிகரின் கேள்விக்கு நாசூக்காக பதில் சொன்ன சமந்தா!

ராகுல் பங்கேற்கும் பிரம்மாண்ட மாநாடு... நடிகை ரம்யா ரோடு ஷோ: குமாரசாமிக்கு எதிராக களமாடும் காங்கிரஸ்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in