சொந்தமாக கோயில் கட்டிய பிரபல நடிகர்கள்!

கோயில் கட்டிய நடிகர்கள்‘
கோயில் கட்டிய நடிகர்கள்‘
1.

பிரபலங்களுக்கு ரசிகர்கள் கோயில் கட்டுவது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பிரபலங்கள் தங்களுக்குச் சொந்தமாக கோயில் கட்டும் செய்திகளையும் பார்க்கிறோம். அப்படி விஜய், அர்ஜூன் என ஆரம்பித்து பிரபலங்கள் பலர் கோயில் கட்டியுள்ளனர்.

2. விஜய்: 

நேற்று முன் தினம் நடிகர் விஜய் சாய்பாபா கோயிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலானது. இந்தப் படத்தைப் பார்த்த பலர், ‘விஜய் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிக்கிறாரா?’ என அரசியல்- மதச்சாயம் பூச ஆரம்பிக்க உடனே அந்தப் புகைப்படம் நீக்கப்பட்டது.

ஆனால், அந்தக் கோயிலை நடிகர் விஜய் தனது அம்மா ஷோபாவுக்காகக் கட்டிக் கொடுத்திருக்கிறார் என்று பின்னர் தான் தெரிய வந்தது. தீவிர சாய்பாபா பக்தையான ஷோபாவுக்கு கொரட்டூரில் 8 கிரவுண்ட் நிலத்தில் விஜய் இந்த சாய்பாபா கோயிலைக் கட்டி இருக்கிறார். கடந்த பிப்ரவரி 10-ம் தேதி கும்பாபிஷேகத்தையும் நடத்தி முடித்து இருக்கிறார்.

3. அர்ஜூன்:

அர்ஜூன் கட்டியுள்ள கோயில்
அர்ஜூன் கட்டியுள்ள கோயில்

தீவிர ஆஞ்சநேய பக்தரான நடிகர் அர்ஜூன், தனக்குச் சொந்தமாக போரூர் கெருகம்பாக்கத்தில் உள்ள தோட்டத்தில் பிரம்மாண்டமான அனுமன் சிலையை நிறுவி கோயில் கட்டி இருக்கிறார். இந்தக் கோயிலில் ஆஞ்சநேயர் அமர்ந்த நிலையில் காட்சி கொடுக்கிறார். ஒரே கல்லில் செய்யப்பட்ட இந்தத் திருமேனி 28 அடி உயரமும் 17 அடி அகலமும் கொண்டது. கர்நாடக மாநிலம் கொய்ரா கிராமத்தில் செய்யப்பட்ட இந்தத் திருமேனி சுமார் 200 டன் எடை கொண்டது. 

தனது குடும்பத்தோடு அவ்வப்போது வந்து தரிசனம் மேற்கொள்ளும் அர்ஜூன், மகள் ஐஸ்வர்யாவின் நிச்சயதார்த்தமும் இங்குதான் நடைபெற்றது.

4. ராகவா லாரன்ஸ்:

ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள கோயில்
ராகவா லாரன்ஸ் கட்டியுள்ள கோயில்

நடிகர் ராகவா லாரன்ஸ் தன் அம்மா மீது அளவுக்கடந்த பிரியம் கொண்டவர். அவரின் தாய் கண்மணியின் சிலை ராஜஸ்தானில் செய்யப்பட்டு சென்னை கொண்டு வரப்பட்டது. சென்னை திருமுல்லைவாயிலில் உள்ள ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் லாரன்ஸ் கோயில் கட்டி அவரது அம்மா சிலையை அங்கு நிறுவினார்.

அன்னையர் தினத்தில் இந்த கோயிலைத் திறந்தும் வைத்தார். இந்த கோவிலில் காயத்ரி தேவி சிலை மற்றும் சிவலிங்கமும் உள்ளது.

5. டேனியல் பாலாஜி:

தனது தாய் மீது கொண்ட அன்பால் கோயில் கட்டிய இன்னொரு நடிகர் டேனியல் பாலாஜி. ஆவடியில் ரகதூள் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலைக் கட்டினார். கடந்த 2019-ம் ஆண்டு இந்த கோயிலை கட்டத் தொடங்கி, இந்த ஆண்டு மார்ச் 9-ம் தேதி கும்பாபிஷேகத்தையும் டேனியல் பாலாஜி சிறப்பாக செய்தார். ஆனால், கடந்த மார்ச் 30 அன்று அவர் மறைந்தது திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...   

லாலுவின் 2 மகள்களுக்கு வாய்ப்பு... பீகாரில் 22 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்தது ஆர்ஜேடி!

சத்தீஸ்கரில் 50 அடி பள்ளத்திற்குள் பேருந்து கவிழ்ந்து 12 தொழிலாளர்கள் பலி... பிரதமர் மோடி இரங்கல்!

ஈபிஎஸ் நண்பர் வீட்டில் 7 மணி நேரம் ஐ.டி ரெய்டு...2 பெட்டிகளில் ஆவணங்களை அள்ளிச் சென்றனர்!

திருமாவளவன் வீட்டில் ஐ.டி அதிகாரிகள் திடீர் சோதனை...சிதம்பரத்தில் சிறுத்தைகள் குவிந்ததால் பரபரப்பு!

நள்ளிரவில் கடை மீது பெட்ரோல் குண்டு வீச்சு... கோவையில் பரபரப்பு!

x
காமதேனு
kamadenu.hindutamil.in