முதல்வர் அலுவலகம், தலைமை செயலகத்துக்கு போகக்கூடாது... கேஜ்ரிவாலுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை!

அர்விந்த் கேஜ்ரிவால் கைது வழக்கு
அர்விந்த் கேஜ்ரிவால் கைது வழக்கு

டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் இடைக்கால ஜாமீன் காலத்தில் அவரது அலுவலகத்துக்கோ, தலைமை செயலகத்துக்கோ செல்லக்கூடாது என உச்ச நீதிமன்றம் ஜாமீன் நிபந்தனை விதித்துள்ளது.

டெல்லி கலால் கொள்கை தொடர்புடைய சட்ட விரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முதல்வருமான அர்விந்த் கேஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் அவர் டெல்லி மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்கும் வகையில், வரும் ஜூன் 1ம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்தது.

உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

கேஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் பல்வேறு கட்டுப்பாடுகள், நிபந்தனைகளை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா மற்றும் தீபங்கர் தத்தா அடங்கிய அமர்வு விதித்துள்ளது.

அதன்படி, இடைக்கால ஜாமீன் காலத்தில் முதல்வர் கேஜ்ரிவால் தனது அலுவலகத்துக்கோ, டெல்லி தலைமை செயலகத்துக்கோ செல்லக் கூடாது. 21 நாள் இடைக்கால ஜாமீன் காலத்தில் துணை நிலை ஆளுநரின் அனுமதியைப் பெறுவதற்கு முற்றிலும் அவசியமானால் தவிர, மற்ற எந்த அதிகாரப்பூர்வ கோப்புகளிலும் முதல்வர் கேஜ்ரிவால் கையெழுத்திடக் கூடாது.

சிறைக் கண்காணிப்பாளரை திருப்திப்படுத்தும் வகையில், 50,000 ரூபாய் ஜாமீன் பத்திரத்தை, அதே தொகைக்கு ஒரு உத்தரவாதத்துடன் கேஜ்ரிவால் வழங்க வேண்டும்.

இடைக்கால ஜாமீன்
இடைக்கால ஜாமீன்

தற்போதைய வழக்கில் தனது பங்கு குறித்து அவர் எந்தக் கருத்தையும் தெரிவிக்க கூடாது. சாட்சிகள் அல்லது வழக்குடன் தொடர்புடைய எந்த அதிகாரப்பூர்வ கோப்புகளையும் கேஜ்ரிவால் அணுக கூடாது. இதுபோன்று பல்வேறு நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை முதல்வர் கேஜ்ரிவாலுக்கு உச்சநீதிமன்றம் விதித்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பாகிஸ்தானை இந்தியா மதிக்க வேண்டும்; அணுகுண்டு வெச்சிருக்காங்க... சர்ச்சையைக் கிளப்பிய மணிசங்கர் ஐயர்!

பகீர்... ஓடும் பைக்கில் தீக்குளித்த காதலர்கள்!

'பாகுபலி’ 3-ம் பாகம்... கட்டப்பாவும் இருக்கிறார்... ராஜமவுலி கொடுத்த சூப்பர் அப்டேட்!

இளையராஜா புது டிரெண்ட் உருவாக்குகிறார்! - வழக்கறிஞர் சரவணன்

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம்... நடிகை நமீதா கொடுத்த ’நச்’ ரியாக்‌ஷன்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in