தீய சக்திக்கு எதிராக பாடுபடுவதே சனாதன தர்மம்... யோகி ஆதித்யநாத் விளக்கம்!

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

சனாதன தர்மம் எப்போதும் தீய சக்திகளை சவாலாக ஏற்றுக்கொண்டு நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நன்மைக்காகவும் செயல்படுகிறது என்று உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூர் ஆலயத்தில் நடந்த நவராத்திரி விழாவில் கலந்து கொண்டார். அங்கு நடந்த பூஜைகளில் பங்கேற்றார். சிறுமிகளை அம்மனாக பாவித்து அவர்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து தீப ஆரத்தி காட்டினார்.

பின்னர், விழாவில் யோகி ஆதித்யநாத் பேசியதாவது, "நவராத்திரி விழா லட்சுமி, சரஸ்வதி, துர்கா என பெண் தெய்வங்களைப் போற்றி வணங்கும் விழா. நமது கலாச்சாரத்தில் பெண்களை தாயாக மதித்து சிறப்பு செய்யப்படுகிறது. பெண் சக்தியைக் கொண்டாடும் விழாவாக நவராத்திர விழா உள்ளது. இந்த விழாவின் நிறைவு நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகிறது.

யோகி ஆதித்யநாத்
யோகி ஆதித்யநாத்

புராண காலத்தில் மக்களைக் கொடுமைப்படுத்தி வந்த மகிஷன் என்ற அசுரனை துர்கை அம்மன் அழித்து வெற்றி பெற்று அமைதியை நிலைநாட்டிய நாள் விஜயதசமி. இது தர்மம், உண்மை, நீதி வெற்றி பெற்ற நாளாகும். ஒவ்வொரு யுகத்திலும் ஒவ்வொரு சூழ்நிலையிலும் தீய சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. லஞ்சம், ஊழல், தீவிரவாதம் என்று வெவ்வேறு வடிவங்களில் தீய சக்திகள் மக்களை கொடுமைப்படுத்துகின்றன. அப்போதெல்லாம், தீய சக்தியை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சனாதன தர்மம் பாடுபடுகிறது. மக்களுக்காகவே சனாதன தர்மம் எப்போதும் பணியாற்றுகிறது. சனாதனம் நமது கலாச்சாரத்தின் வாழ்க்கை முறை.

உலக மக்கள் எல்லாரையும் ‘வசுதேவ குடும்பகம்’ என ஒரே குடும்பமாகக் கருதி அனைவரிடமும் அன்பு செலுத்துவதே சனாதனத்தின் சிறப்பு. அது அறவழியைப் பின்பற்றுவதால்தான் சனாதன தர்மம் என்று அழைக்கப்படுகிறது. அன்பையும் அமைதியையும் விதைத்து மனித குலத்துக்கே வழிகாட்டியாக சனாதன தர்மம் விளங்குகிறது" என்று கூறினார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in