ராகுல் காந்தி தோற்ற அமேதி தொகுதியை குறிவைக்கும் ராபர்ட் வதேரா... அரசியல் கணக்கு என்ன?

ராபர்ட் வதேரா - பிரியங்கா காந்தி
ராபர்ட் வதேரா - பிரியங்கா காந்தி

இந்திய தேசம் முழுவதும் நான் அரசியலில் இறங்க வேண்டும் என விரும்புகிறது என்று அமேதி தொகுதியில் களமிறங்கும் தனது அரசியல் ஆசையை மீண்டும் வெளிப்படுத்தி இருக்கிறார் ராபர்ட் வதேரா.

இந்த மாதத்தின் தொடக்கம் முதலே தனது அரசியல் ஆசையை, பேட்டிகள் மூலம் வெளிப்படையாக தெரிவித்து வருகிறார் ராபர்ட் வதேரா. காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தியின் கணவரும் தொழிலதிபருமான ராபர்ட் வதேரா, ராகுல் காந்தி போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படும் அமேதி தொகுதியை குறிவைத்திருக்கிறார். அமேதி தொகுதி மக்களும் உத்தரபிரதேச மக்களும் தனது அரசியல் வருகையை ஆவலுடன் எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.

ராபர்ட் வதேரா
ராபர்ட் வதேரா

இதற்கிடையே மீண்டும் ஒருமுறை தற்போது தனது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இம்முறை ‘நாடு முழுமைக்குமே தன்னை அரசியலில் இறங்கி தேர்தலில் போட்டியிட விரும்புவதாக’ அவர் தெரிவித்துள்ளார். “நாடு முழுவதிலும் இருந்து குரல் எழுகிறது. நாட்டு மக்கள் மத்தியில் நான் எப்போதும் இருப்பதால் நான் தீவிர அரசியலில் இறங்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். நான் 1999 முதல் அமேதியில் பிரச்சாரம் செய்து வருகிறேன்” என்று அவர் தெரிவித்தார்.

"மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். அவர்கள் மத்திய விசாரணை அமைப்புகளை தவறாகப் பயன்படுத்தும் பாஜகவை அகற்ற விரும்புகிறார்கள். ராகுல் மற்றும் பிரியங்காவின் கடின உழைப்பைக் கண்டு இந்திய மக்கள் காந்தி குடும்பத்துடன் எப்போது இருக்கிறார்கள்" என்று தன்னையும் காந்தி-நேரு குடும்ப பின்புலத்தில் இணைத்துக்கொண்டார்.

முன்னதாக "காந்தி குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் அமேதிக்கு திரும்பி வர வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள். அவர்கள் அந்த நபரின் வெற்றியை பெரும் வாக்கு வித்தியாசத்தில் உறுதி செய்வார்கள். நான் அரசியலில் எனது முதல் அடியை எடுத்து வைத்து எம்பி-யாக நினைத்தால், அதை அமேதி வெற்றி மூலம் ஆரம்பிக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்" என்று ராபர்ட் வதேரா கூறியிருந்தார். ஆனால் ராபர்ட் வதேராவின் தன்னிச்சையான கருத்துகளுக்கு உரிய பதிலின்றி காங்கிரஸ் தலைமை கமுக்கம் காக்கிறது.

மனைவி பிரியங்கா காந்தியுடன் ராபர்ட் வதேரா(இடது)
மனைவி பிரியங்கா காந்தியுடன் ராபர்ட் வதேரா(இடது)

கடந்த தேர்தலில் அமேதியில் போட்டியிட்டு பாஜகவின் ஸ்மிருதி இரானியிடம் ராகுல் காந்தி தோற்றிருந்தார். இதனால் மீண்டும் அவர் அமேதியில் போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இதனிடையே சோனியா காந்தி ராஜ்யசபா எம்பி-யாகி இருப்பதால், அவரது ரேபரேலி தொகுதியில் ராகுல் போட்டியிடுவார் என்றும், அமேதியில் பிரியங்கா போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வகையில் பிரியங்காவுக்கு பதில் தன்னை அமேதியில் நிறுத்த வேண்டும் என கணக்குப் போட்டு, காங்கிரஸ் தலைமைக்கு பகிரங்கமாக அழுத்தம் தந்து வருகிறார் ராபர்ட் வதேரா.

உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியுடன் கூட்டணி வைத்திருக்கும் காங்கிரஸ் கட்சி, மொத்தமுள்ள 80 மக்களவை தொகுதிகளில் 17ல் நிற்கிறது. எஞ்சிய 63 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி போட்டியிடுகிறது. அமேதி மற்றும் ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் 5ம் கட்டமாக மே 20 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹாட்ரிக் வெற்றி... உலகக் கோப்பை வில்வித்தை போட்டியில் இந்தியாவுக்கு மூன்று தங்கப் பதக்கங்கள்!

700 ஹெக்டேர் நாசம்; நைனிடால் நகரை நெருங்கியது காட்டுத் தீ: இந்திய ராணுவம் விரைந்தது!

ஊஞ்சல் கயிறு கழுத்தில் இறுக்கி 8 வயது சிறுமி மரணம்... வீட்டில் தனியாக இருந்தபோது விபரீதம்

ஆமாம்... தமிழ் சினிமாவில் கட்டப்பஞ்சாயத்து இருக்கிறது... இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேட்டி!

தனியார் கம்பெனியின் ஆசிட் தொட்டியில் விழுந்து தொழிலாளி மரணம்... சென்னை அருகே சோகம்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in