அமைச்சர் பொன்முடி அதிர்ச்சி... மனைவியின் நிறுவனத்தில் பணப்பெட்டியுடன் கொள்ளையர்கள் ஓட்டம்!

கடலூர் விஷால் மோட்டார்ஸ்
கடலூர் விஷால் மோட்டார்ஸ்

அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இருசக்கர வாகன விற்பனை  நிறுவனத்தில் கதவுகள் உடைக்கப்பட்டு பணம் உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் மனைவிக்கு கடலூரில் விஷால் மோட்டார்ஸ் என்ற பெயரில் இருசக்கர வாகன விற்பனை நிறுவனம் உள்ளது.  திருப்பாதிரிபுலியூரில் உள்ள அந்த விற்பனை நிறுவனத்தில் நேற்று விற்பனை முடிந்து இரவு கதவுகளை அடைத்துவிட்டு அதன் ஊழியர்கள் சென்றுவிட்டனர்.

இன்று காலை வழக்கம்போல் விற்பனை நிலையத்தை  திறக்க ஊழியர்கள் வந்து பார்த்தபோது விற்பனை மையத்தின் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் உள்ளே சென்று பார்த்தபோது உள்ளே இருந்த ஆவணங்கள் மற்றும் பணம் இருந்த இரண்டு லாக்கர்கள் கொள்ளையர்களால் தூக்கிச் செல்லப்பட்டு இருப்பது தெரியவந்தது. 

அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி

இதையடுத்து அமைச்சர் பொன்முடி மற்றும் திருப்பாதிரிபுலியூர் காவல்துறைக்கு ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.  இதைத்தொடர்ந்து விற்பனை நிறுவனத்திற்கு வந்த போலீஸார், கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டு இது குறித்து வழக்குப் பதிவு செய்து  விசாரணை செய்து வருகின்றனர்.  அமைச்சருக்கு சொந்தமான நிறுவனத்தில் துணிச்சலாக கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்துச் சென்றிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி… தடம் புரண்ட விரைவு ரயில்... 6 பேர் பலி... பலர் காயம்!

ரூ. 3.48 கோடியை குப்பையில் கொட்டிய தமிழக அரசு; மாணவர்களுக்கு வழங்க வேண்டிய 1,00,000 சிம்கார்டுகள் வீணடிப்பு!

HBD SNEHA : ‘புன்னகை இளவரசி’ நடிகை சிநேகா பிறந்தநாள்!

போலி சான்றிதழ்... 24 வருடமாக வேலை செய்த அரசு பள்ளி ஆசிரியை!

அதிர்ச்சி... நள்ளிரவில் வெடித்து சிதறிய செல்போன் சார்ஜர்; பற்றி எரிந்த வீடு... 3 பேருக்கு தீவிர சிகிச்சை

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in