முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிக்கிறது பாஜக... ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு!

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி

பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிப்பதாக, தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி விமர்சித்துள்ளார்.

நாடு முழுவதும் 3 கட்ட மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில், இன்று நான்காவது கட்ட தேர்தல் நடந்து வருகிறது. ஆந்திராவின் 25 தொகுதிகளுக்கும் தெலங்கானாவின்17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் 4, பீகாரில் 5, ஜார்க்கண்டில் 4, மத்திய பிரதேசத்தில் 8, மகாராஷ்டிராவில் 11, உத்தரப் பிரதேசத்தில் 13, மேற்கு வங்கத்தில் 8, காஷ்மீரில் ஸ்ரீநகர் உள்ளிட்ட மக்களவை தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை வாங்கி சரிபார்க்கும் பாஜக வேட்பாளர் மாதவி லதா
இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை வாங்கி சரிபார்க்கும் பாஜக வேட்பாளர் மாதவி லதா

இந்நிலையில், தெலங்கானாவில் ஹைதராபாத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் மாதவி லதா, செகந்திராபாத் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். அப்போது, அங்கு வாக்களிப்பதற்காக காத்திருந்த இஸ்லாமிய பெண்கள் சிலரிடம் பேச்சுக்கொடுத்த அவர், அவர்களது ஆதார் கார்டுகளை வாங்கி வாக்காளர் அடையாள அட்டையுடன் ஒப்பிட்டு சரிபார்த்தார்.

அவரது இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர், ஏற்கெனவே தேர்தல் பிரச்சாரத்தின்போது, மசூதி நோக்கி அம்பு எய்வது போல் சைகை செய்து சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி

இதை அரசியல் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்த தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி,"இஸ்லாமிய பெண்களிடம் பாஜக வேட்பாளர் நடந்துக் கொண்ட வீடியோவை நான் இன்னும் பார்க்கவில்லை. ஆனால், பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளை சிதைக்க முயற்சிக்கிறது. ஆனால், இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்க போவதில்லை. மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது" என்று தெரிவித்தார்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் 3 நாட்களுக்கு கன மழை; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

பெலிக்ஸ் ஜெரால்டு எங்கே?! கண்டுபிடித்துத் தருமாறு மனைவி காவல்துறையில் மனு!

பிரபல துணிக்கடையில் பயங்கர தீ விபத்து... பல லட்ச ரூபாய் மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசம்!

ஒரே நேரத்தில் ஒரு கோடி பேருக்கு தகவல்... பள்ளிக்கல்வித்துறை புதிய அப்டேட்ஸ்!

16,500 கோடி பயிர்க் கடன்... இந்த ஆண்டுக்கு இலக்கு நிர்ணயித்தது கூட்டுறவுத் துறை!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in