மாநில கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கலாம்... சந்திரசேகர் ராவ் போடும் புது ரூட்!

s
s

மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர் மாநில கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கலாம் என்றும், தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி வேறு வழியில்லாமல நமக்கு ஆதரவளிக்க நேரிடும் என்று பாரத் ராஷ்டிர சமிதி தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் பிஆர்எஸ் வேட்பாளர்களில் ஒருவரான நாம நாகேஸ்வர ராவுக்கான பிரச்சாரத்தில் உரையாற்றிய சந்திரசேகர் ராவ், ‘நாகேஸ்வர ராவ் மத்திய அமைச்சராக வரமுடியும்’ என்று கூறியிருந்தார்.

இதனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு பிஆர்எஸ் கட்சி ஆதரவளிக்குமா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பதிலளித்த சந்திரசேகர் ராவ், "நீங்கள் நம்பாத ஒரு ஆச்சரியமான விஷயத்தைச் சொல்கிறேன். இந்த முறை நாட்டில் புதிதாக ஒன்று நடக்கப் போகிறது. பிராந்தியக் கட்சிகள் இப்போது ஒரு சக்தியாக வெளிப்படும் அதைப் பார்ப்பீர்கள், எனவே மாநில கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சி அமைக்கலாம். அப்போது வேறு வழியில்லாமல் தேசிய ஜனநாயக கூட்டணி அல்லது இந்தியா கூட்டணி மாநில கட்சிகளின் ஆட்சிக்கு ஆதரவளிக்கும் நிலை ஏற்படும்.

நரேந்திர மோடி
நரேந்திர மோடி

2019-ல் தென்னிந்தியாவில் உள்ள 130 இடங்களில் 29 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக, இந்த முறை 10 இடங்களுக்கு மேல் வெற்றி பெறாது. தேசிய அளவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெறும் 226 இடங்களுக்குக் குறைவாகவே வெல்லும்.

நரேந்திர மோடி தனது கவர்ச்சியை இழந்துவிட்டார். மக்கள் அதை உணர்ந்துள்ளனர். ரூபாயின் மதிப்பு மிகக் குறைந்த நிலைக்குச் சென்றுவிட்டதால், இந்தியாவில் பொருளாதார வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டில் விவசாயிகள் உட்பட பல தரப்பு மக்களும் கோபத்தில் உள்ளனர்" என்று அவர் கூறினார்.

சந்திரசேகர் ராவ் -தெலங்கானா
சந்திரசேகர் ராவ் -தெலங்கானா

2019 மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் 4 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, இம்முறை இரட்டை இலக்கத்தில் வெற்றிபெறும் என்று அக்கட்சி கூறியுள்ளது. இதுபற்றி பேசிய கேசிஆர், "பாஜக கோயபல்ஸ் பிரச்சாரத்தை நடத்துகிறது. இந்த மக்களவைத் தேர்தலில் தெலங்கானாவில் பாஜகவுக்கு ஒன்று அல்லது எதுவும் கிடைக்காது" என்று கூறினார்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்து 6 மாதங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும், ரேவந்த் ரெட்டி அரசின் மீது மக்கள் கோபத்தில் உள்ளனர் என்றும் கேசிஆர் கூறினார்.

இதையும் வாசிக்கலாமே...

மகளிர் மல்யுத்தம்... பாரீஸ் ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார் நிஷா தஹியா!

மதுரையில் அதிர்ச்சி... காவல் ஆய்வாளர் வீட்டு கதவை உடைத்து 250 பவுன் நகைகள் கொள்ளை!

இங்கிலாந்தில் மன்னரைத் தொடர்ந்து இளவரசியும் மருத்துவமனையில் அனுமதி... பதறும் மக்கள்!

ஆந்திராவில் பண மழை... விபத்தில் சிக்கிய வேனிலிருந்து கட்டுக் கட்டாக கொட்டிய கோடிகள்!

லாரி மீது மோதி பற்றி எரிந்த கார்... மணமகன் உட்பட 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in