இரத்த உறவை அழைக்கிறோம்... இரத்தத்தால் கையெழுத்திட்டு உதயகுமார் அழைப்பு!

இரத்த உறவை அழைக்கிறோம்... இரத்தத்தால் கையெழுத்திட்டு உதயகுமார் அழைப்பு!

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை வரவேற்கும் விதமாக ரத்தத்தால் கையெழுத்திட்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில், வருகிற 30-ம் தேதி முத்துராமலிங்க தேவர் குருபூஜை விழா நடக்கிறது. இந்த பூஜைக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வர உள்ளதாக தகவல் வெளியாகிய நிலையில், அமமுகவினர் கடுமையான வார்த்தைகளால் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எடப்பாடி பழனிசாமியை வரவேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரத்தத்தால் கையெழுத்திட்டு உதயகுமார் அறிக்கை
ரத்தத்தால் கையெழுத்திட்டு உதயகுமார் அறிக்கை

அதில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வழங்கிய 13.5 கிலோ எடையுள்ள தங்க கவசத்தை, முத்துராமலிங்க தேவரின் திருவருவுச்சிலைக்கு அணிவிக்க வேண்டும் என அவர் இபிஎஸ்சிற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த அறிக்கையின் இறுதியில் ’ரத்தம், ரத்த உறவை அழைக்கிறது’ என அவர் ரத்தத்தால் கையெழுத்திட்டு அழைப்பு விடுத்துள்ளார். தற்போது இந்த அறிக்கை அரசியல் கட்சியினர் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in