தங்கம் இப்போ தகரமாச்சு... தங்க தமிழ்ச்செல்வனை கிண்டலடித்த ஆர்.பி.உதயகுமார்!

தங்க தமிழ்ச்செல்வன் - ஆர்.பி.உதயகுமார்.
தங்க தமிழ்ச்செல்வன் - ஆர்.பி.உதயகுமார்.
Updated on
2 min read

"அதிமுகவில் இருந்தபோது தங்க தமிழ்ச்செல்வன் இருந்தார். திமுகவிற்கு சென்ற பிறகு தகர தமிழ் செல்வனாக மாறிவிட்டார்" என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கிண்டலடித்துள்ளார்.

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பில் நாராயணசாமி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக பொதும்பு கிராமத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, மக்களிடையே பேசிய அவர், "அதிமுகவில் தங்க தமிழ் செல்வனாக இருந்தார். திமுகவில் சென்றவுடன் தகர தமிழ்ச்செல்வனாக மாறிவிட்டார்.

செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார்
செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார்கோப்பு படம்

அதேபோல் டிடிவி தினகரன், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் தற்கொலைக்கு சமம் என்று கூறினார். தற்போது தன் மீது உள்ள பெரா வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் கூட்டணி வைத்துள்ளார். வெளிநாட்டில் உள்ள கள்ளப்பணத்தை மீட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 15 லட்ச ரூபாய் டெபாசிட் செய்வோம் என்று கூறினார்கள். அதை பாஜக செய்யவில்லை. அம்பானி, அதானி, டாட்டா பிர்லா போன்றவர்களுக்கு கடனை பாஜக அரசு ரத்து செய்துள்ளது. அந்தக் கடனை மீட்டு பெண்களுக்கு மாதம் 3000 கொடுக்கலாம்.

போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்
போலீஸாருடன் அண்ணாமலை வாக்குவாதம்

அண்ணாமலை ஒரு ரெடிமேட் அரசியல் தலைவர். அவருக்கு ஆளுமை பண்பு, தலைமை பண்பு எதுவும் இல்லை. காலி பெருங்காய டப்பாவாகதான் உள்ளார். தோல்வி பயத்தில் தெருசண்டை போல பேசி வருகிறார். அவரிடம் அதிகாரம் கொடுத்தால் குரங்கு கையில் பூமாலை போல ஆகிவிடும். அவரிடத்தில் உண்மை இல்லை போலித் தன்மை தான் உள்ளத்தில் உள்ளது. இந்த மக்களவைத் தேர்தலில் திமுக கொள்ளையடித்த பணத்தை 500, 1000 ரூபாயை கொடுக்க உள்ளனர். ஏற்கெனவே அமைச்சர் பி.டி. ஆர். தியாகராஜன், ஸ்டாலின் மகனும், மருமகனும் 30,000 கோடியை கொள்ளையடித்ததாக கூறியுள்ளார். அந்த பணத்தை வைத்து ஒரு வீட்டுக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கலாம் ஆனால் ஐநூறு ரூபாய் , ஆயிரம் ரூபாயை ஓட்டுக்கு ,நோட்டு கொடுக்க திமுக உள்ளனர்" என்று அவர் கூறினார்

இதையும் வாசிக்கலாமே...   

அடேங்கப்பா ரூ.4,650 கோடி பறிமுதல்... முதற்கட்ட தேர்தலுக்கு முன்பே அதிரடி காட்டிய தேர்தல் ஆணையம்!

அதிர்ச்சி... அம்பேத்கர் ஜெயந்தி ஊர்வலத்தில் பங்கேற்ற இளைஞர் வெட்டிக்கொலை!

பிரதமர் மோடியை பார்க்கச் சென்றவர் உயிரிழப்பு... பாதுகாப்புக்காக கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி பலி!

டயர் வெடித்து தலைகீழாக கவிழ்ந்த மணல் லாரி... மணலில் புதைந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலியான சோகம்!

ஒபாமாவே அஞ்சு வருஷம் தான்... இடத்தை காலி பண்ணுங்க மோடி... முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரம் ஆவேசம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in